உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பறிமுதலான கஞ்சா அழிப்பு

பறிமுதலான கஞ்சா அழிப்பு

தங்கவயல்: தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் 9 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவைகளில் பல்வேறு இடங்களில் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் எடை 83.449 கிலோ. இதன் மதிப்பு 66 லட்சத்து 75 ஆயிரத்து 920 ரூபாய். இவற்றை மூட்டைகளாக கட்டி, பெங்களூரு கிராமப்புற மாவட்டம், நெலமங்களா தாலுகா, தாபஸ்பேட்டையில் கர்நாடக தொழிற்பேட்டையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தங்கவயல் போலீசார் ஒப்படைத்தனர். அங்கு நவீன தொழில்நுட்பம் மூலம் அழிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !