உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது திட்டத்திற்கு அனுமதி பிரசாரத்தில் தேவகவுடா உறுதி

மேகதாது திட்டத்திற்கு அனுமதி பிரசாரத்தில் தேவகவுடா உறுதி

ராம்நகர்: மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற, பிரதமர் நரேந்திர மோடியிடம் அனுமதி வாங்கி தருவதாக, தேர்தல் பிரசாரத்தில் ம.ஜ.த., மூத்த தலைவர் தேவகவுடா பேசினார்.ராம்நகரின் சென்னப்பட்டணாவில் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிடும் நிகிலை ஆதரித்து, அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:மேகதாது அணை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே செயல்படுத்த முடியும். அணை கட்டும் விஷயத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனது கடைசி மூச்சுக்கு முன், மேகதாது அணை திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் இருந்து அனுமதி வாங்கி கொடுக்கிறேன். எனது கோரிக்கைகளுக்கு பல முறை பிரதமர் செவிசாய்த்து உள்ளார்.இகலுாரில் நான் அணை கட்டியது பெரிய விஷயம் இல்லை. நான் பிரதமர் ஆனது கடவுளின் கருணை. சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் தலைவர்கள் நாடகம் ஆடுகின்றனர். அவர்களை மக்கள் நம்ப வேண்டாம்.ஹாரங்கி, ஹேமாவதி, எகச்சி அணைகளை கட்டியது யார் என்று, முதல்வர் சித்தராமையாவிடம் கேளுங்கள். எனது பேரன் நிகிலை கட்சியின் மாநில தலைவர் ஆக்குவேன். அவரை சிறந்த தலைவராக உருவாக்கி காட்டுவேன்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 08, 2024 20:11

மஹாராஷ்டிராவில் மூத்த அரசியல்வாதி ஷரத் பவார் அரசியலுக்கு முழுக்கு போட முடிவு என்று நேற்றைய செய்தி. அவரைவிட இவர் வயது முதிர்ந்தவர். இவர் என்றைக்கு அரசியலுக்கு முழுக்கு போடுவார்? அல்லது போடவே மாட்டாரா?


MUTHU
நவ 08, 2024 08:53

இது திமுக அதிமுக விற்கு நீட் ஒழிப்பு உறுதிமொழி போல் தான்