உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேம்பாட்டு ஆணைய 152 வீடுகள் ஒரு மணி நேரத்தில் விற்பனை

மேம்பாட்டு ஆணைய 152 வீடுகள் ஒரு மணி நேரத்தில் விற்பனை

புதுடில்லி:டில்லி மேம்பாட்டு ஆணையத்தின், 'அப்னா கர் ஆவாஸ் யோஜனா' திட்டத்தில் அறிவிக்கப்பட்ட, 152 பிளாட்களும் ஒரு மணி நேரத்துக்குள் முன் பதிவு செய்யப் பட்டன. இதன் வாயிலாக, ஆணையத்துக்கு 100 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் கூறினர். லோக் நாயக் புரம், டி பிளாக்கில் 76 நடுத் தரப் பிரிவு பிளாட்கள், நரேலா ஜி பிளாக்கில் 76 பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான பிளாட்கள் ஆகிய வீடுகளின் விற்பனையை டில்லி மேம்பாட்டு ஆணையம் அறிவித்து இருந்தது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேற்று நடந்த இந்த விற்பனையில் ஒரு மணி நேரத்தில் 152 பிளாட்டுகளும் முன் பதிவு செய்யப்பட்டன. இந்த விற்பனை வாயிலாக ஆணையத்துக்கு, 100 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை