உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் ரூ.34,200 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் ரூ.34,200 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடில்லி: குஜராத்திற்கு ரூ.34,200 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இன்று (செப்.,20) அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.குஜராத் மாநிலத்திற்கு இன்று (செப் 20) பிரதமர் மோடி வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாவ்நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.34,200 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l6q63bof&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிகழ்வில் அவர் பேசிய அவர், ''எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்த வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் ஆகும்,'' என்றார்.பிரதமர் தோலேராவை வான்வழியாக ஆய்வு செய்ய உள்ளார். பிற்பகல் 1:30 மணியளவில், அவர் ஒரு மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க உள்ளார். பின்னர் லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தைப் பார்வையிட உள்ளார். கடல்சார் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரதமர் ரூ.7,870 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார். இந்திரா கப்பல்துறையில் மும்பை சர்வதேச கப்பல் முனையத்தை அவர் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ