உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை: சுப்ரீம் கோர்ட்

திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை: சுப்ரீம் கோர்ட்

'திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை' என, தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 'குட்டு' வைத்திருக்கிறது. மேலும், 'கோவில் நிதியை, அரசுக்கு வரும் நிதியாக கருதக் கூடாது' என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பேசிய ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோவில் நிதியில் இருந்து 80 கோடி ரூபாய் செலவில், 27 கோவில்களில் திருமண மண்டபங்கள் கட்டப்படும்' என, அறிவித்தார். இதைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அரசாணை ரத்து கோவில் நிதியை கொண்டு திருமண மண்டபங்கள் கட்டுவது என்பது, ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'கோவில் நிதியை கொண்டு திருமண மண்டபங்கள் கட்டுவதற்கான அதிகாரம் அரசுக்கு இல்லை. கோவில் நிதியை மத ரீதியான விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். 'கோவில் நிதி என்பது வர்த்தக நடவடிக்கைகளுக்காக அல்ல. அதில் திருமண மண்டபம் கட்டுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'கோவில் நிதியை பொது அல்லது அரசு நிதியாக கருத முடியாது. எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம்' எனக் கூறி, கடந்த ஆக., 19ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருமண மண்டபங்களை கட்ட வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தவில்லை.

விசாரணை தேவை

கோவில் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக அவர்கள் காணிக்கை செலுத்தி இருக்கலாம். கோவிலில் திருமண மண்டபங்கள் கட்டி, திருமணங்கள் நடந்தால், அனைத்து விதமான மோசமான பாடல்களும் அங்கே ஒலிக்கும். இதற்காக தான் கோவில் நிலங்கள் இருக்கிறதா? திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு பதிலாக, அந்த நிதியை கல்வி மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நற்காரியங்களுக்காக செலவிடலாம். இந்த விவகாரத்தில் அரசு எடுத்த முடிவு சரியா? தவறா? என்ற விவாதத்திற்கு வரவில்லை. இவ்வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி இருக்கிறது. எனவே, மனு தாரர்களுக்கு ஆதரவாக எந்தவொரு இடைக்கால உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் நவ., 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் . -டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Vasan
செப் 17, 2025 14:05

திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் செலவு என்றால், அதில் 500 கோடி ரூபாய் அவர் பாக்கெட்டுக்கு சென்று விடும். அதனால் தான் அவ்வளவு தீவிர முயற்சி. வேண்டுமென்றால் அவர் இது நாள் வரை கொள்ளையடித்த பணத்தில் கல்யாண மண்டபங்கள் கட்டி கொடுக்கட்டும், விமோச்சனம் பெறட்டும்.


Barakat Ali
செப் 17, 2025 13:13

கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது... நான் சொல்லல .... ஒரு ... சொன்னது ....


மாபாதகன்
செப் 17, 2025 12:26

சிதம்பரம் கோவில் உண்டியலில் பணம் போடாதீர்கள் என்று ரத்தின சுருக்கமாக சொல்லியுள்ளார்.


ஆரூர் ரங்
செப் 17, 2025 16:13

அங்கே இல்லவே இல்லாத உண்டியலில் என்னத்த போட?


Venugopal S
செப் 17, 2025 11:34

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நியாயமானது, திருமண மண்டபம் கட்டுவது சரியானதல்ல!


Rathna
செப் 17, 2025 11:31

கடவுள் பணம் கேட்கவில்லை. உங்கள் அன்பயே மற்றும் பக்தியை கேட்கிறார். கோவிலுக்கு விளக்கு எரிக்க எண்ணெய், நெய்வேத்தியம் செய்து குழந்தைகளுக்கு வழங்க தின்பண்டங்கள், குங்குமம், சந்தனம், வாசனை திரவியங்கள், பூக்கள் ஆகியவற்றை வாங்கி வழங்குங்கள். ஏழை அர்ச்சகர்களும், நாயனம் வாசிப்பவர்களுக்கு, கோவிலை சுத்தப்படுபவர்க்கு, ஓதுவர்களுக்கு ஒரு சிறு பணம் வழங்குங்கள். அவர்கள் குடும்பத்தை நடத்த, குழந்தைகளை படிக்க வைக்க முடியும். மூடியிருக்கும் கோவில்களில் ஒரு வேளை பூஜை செய்ய நிதி உதவி செய்ய முடியுமா என்று பாருங்கள். கோவில் உண்டியல் பணம் தவறாக பயன்படுத்தப் படுகிறது என்று தெரிந்தும் தவறு செய்வது நாம்தான்.


ஆரூர் ரங்
செப் 17, 2025 11:22

முன்பு மாநகராட்சிகளின் நிதியிலிருந்து திருமண மண்டபங்கள் கட்டினர். ஆனால் அவற்றை லோக்கல் கழக ஆட்கள் கைப்பற்றி பன்மடங்கு உள்வாடகைக்கு விட்டனர். சில மண்டபங்கள் நிரந்தர ஆக்கிரமிப்பில் உள்ளன. இதே கதிதான் அறநிலையத்துறை கட்டிடங்கள்... மதசார்பற்ற அரசுக்கு மத சார்பிலான ஆலயங்களில் என்ன வேலை? கழக மாடல் சிலை ஆட்டை.


Anand
செப் 17, 2025 10:43

திருடன் கையில் சாவியை கொடுத்தால் என்ன செய்வான்?


அப்பாவி
செப் 17, 2025 10:08

கோவிலில் பணம் போடுவதும் ஒருவகை லஞ்சமே இல்லே கடவுளுக்கு கமிஷன். சரி, உண்டியல் பணத்த என்னதான் செய்யணுமாம்?


Anand
செப் 17, 2025 10:42

இங்கு என்ன வேலை?


theruvasagan
செப் 17, 2025 11:10

பொதுச் சேவை செய்ய அரசியலுக்கு வந்தோம் என்று சொல்லி எம்எல்ஏ எம்பி மந்திரிகளாக தேர்தெடுக்கப் பட்டவர்களுக்கு அவர்களுக்கு சம்பளம் சலுகைகள் ஓய்வூதியம் என்று அளவே இல்லாத சலுகைகள் கொடுப்பதும் லஞ்சம்தானே. அவைகளை நிறுத்தச் சொல்லும்படி கேட்பீர்களா.


Ganapathy Subramanian
செப் 17, 2025 10:03

கருத்து வரவேற்க தக்கது. ஆனால் பயன் பெரும் அமைப்புகள் கட்சிக்காரர்கள் அல்லது அவர்களது தொடர்புகளுக்கு அப்பால் இருக்க வேண்டும். அந்த நிதியை எப்படி செலவு செய்தனர் என்று அவர்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் அறிக்கை அளிக்க வேண்டும்.


vbs manian
செப் 17, 2025 10:00

வீர வசனம் பேசிய அமைச்சர் முட்டு குடுக்கும் சகபாடிகள் மீடியா கவனிப்பார்களா. பல கோவில்களில் குடிநீர் கழிப்பறை வசதி இல்லை. ஹோட்டல் போன்று பிரசாத விற்பனை. ராமேஸ்வரத்தில் கடலில் இறங்கி குளிக்க மனம் ஒப்பவில்லை. கோவிலுக்கு வெளி பிரகாரத்தில் நடக்க முடியவில்லை. வெய்யில் சுட்டெரிக்கிறது மேலும் கீழும். அர்ச்சகர் வயிற்றில் ஈர துணி.


முக்கிய வீடியோ