உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போயிங் விமானங்களின் பாதுகாப்பு: ஆய்வு செய்ய ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ உத்தரவு

போயிங் விமானங்களின் பாதுகாப்பு: ஆய்வு செய்ய ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவின் போயிங் 787 - 8 / 9 ரக விமானங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமானப்போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையமான விமான போக்குவரத்து ஆணையரகம்(டிஜிசிஏ) உத்தரவிட்டு உள்ளது.ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவின் 'போயிங்' 787-8' ரக 'ட்ரீம் லைனர்' இரட்டை இன்ஜின் விமானம், நேற்று மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது. 30 வினாடிகளில் இந்த விமானம், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் பயணிகள் , விமான ஊழியர்கள் உட்பட 265 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், டிஜிசிஏ வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: பிராந்திய டிஜிசிஏ அதிகாரிகளுடன் இணைந்து Gen X இன்ஜின்கள் பொருத்தப்பட்ட விமானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன், வரும் ஞாயிறு முதல், விமானம் கிளம்புவதற்கு முன்னர், எரிபொருள் அளவு கண்காணிப்பு மற்றும் தொடர்புடைய அமைப்பு சோதனைகள், ஹைட்ராலிக் அமைப்பு மற்றும் விமானம் பறப்பதற்கான அமைப்புகள் உள்ளிட்டவற்றை தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் மறு அறிவிப்பு வரும் வரை 'விமான கட்டுப்பாட்டு ஆய்வு' முறையை அறிமுகம் செய்ய வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மின் உறுதி சோதனை செய்வது முக்கியம்.போயிங் 787 -8 / 9 ரக விமானங்களில் கடந்த 15 நாட்களில் ஏற்பட்ட கோளாறுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பராமரிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆய்வு குறித்த அறிக்கைகளை டிஜிசிஏ.,விடம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

mynadu
ஜூன் 13, 2025 23:42

ஏர் இந்தியா பிலைட் டொரோண்டோ கனடா டு டெல்லி பிலைட் ரொம்ப மோசமா இருக்கும், பாதி சீட் உடைஞ்சு , சீட் பெல்ட் அறுந்து , வீடியோ சிஸ்டம் வேலையே செய்யாது. ரொம்ப கொடுமையான விஷயம் 38000 அடிக்கு மேல பறக்கும் போது செமையா பயமா இருக்கும். இதுவே வேலை செய்யாம இருக்குதுனா என்ஜின் மற்ற முக்கியமனா விஷயம் எப்பெடி அவங்க கவனிச்சு இருப்பாங்கன்னு நம்புறது. இந்திய அரசு இவங்கள கடுமையா தண்டிக்கனும் அதுபோல பழைய பிலைட் செக் பண்ணி பறக்க அனுமதி சான்றிதழ் வழங்கினால் மட்டுமே பார்க்கனும் கடுமையா எச்சரிக்கை கொடுக்கனும்


Ramesh Sargam
ஜூன் 13, 2025 22:08

200 பிளஸ் உயிர்களை பலி கொடுத்தபின் ஆய்வாம். இந்த ஆய்வை விமானம் புறப்படுவதற்கு முன்பு முறையாக செய்திருந்தால்… உயிர்பலி தடுக்கப்பட்டிருக்கும்.


Iyer Sethuraman
ஜூன் 13, 2025 21:59

Welcome one. Many planes need proper maintenance and servicing.


சமீபத்திய செய்தி