உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்

நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு பின்னர் ஹிந்தியில் மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‛தேரே இஸ்க் மெயின்' என்ற படத்தில் நடித்துள்ளார். நாயகியாக கிர்த்தி சனோன் நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வித்தியாசமான உணர்வுப்பூர்வமான காதல் கதையில் இப்படம் உருவாகிறது.சில தினங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையொட்டி படக்குழுவினர் மும்பையில் சிறிய அளவில் இரவு பார்ட்டியாக கொண்டாடினர். இதில் இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ், நாயகி கிர்த்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இவர்கள் தவிர்த்து நடிகைகள் மிருணாள் தாக்கூர், தமன்னா, பூமி பட்னேகர் போன்ற தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகைகளும் பங்கேற்றனர். இதுதொடர்பான போட்டோக்கள் வலைதளங்களில் வைரலானது.இதுபற்றி எழுத்தாளர் கனிகா தில்லான் பார்ட்டி போட்டோக்களை பகிர்ந்து, “எங்கள் இதயங்கள் நிறைந்திருக்கின்றன. எங்கள் அசல் ராஞ்சனா வீட்டில் தனுஷ். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நிறைய மகிழ்ச்சி, பல நினைவுகளுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தாமரை மலர்கிறது
ஜூலை 04, 2025 19:10

பூவை சுற்றி வண்டுகள் நடனமாடும். தேனை சுற்றி கரடிகள் ஆடும். மீனை சுற்றி பறவைகள் தாளம் போடும். வெற்றிபெற்றவனை சுற்றி பெண்கள் கும்மாளம் போடுவார்கள்.


Chandru
ஜூலை 04, 2025 17:38

Who is this Dhanush?


Thravisham
ஜூலை 04, 2025 15:37

போதை மருந்துகளுடன் ஜமாய் பார்ட்டியா?


Palanisamy Sekar
ஜூலை 04, 2025 15:24

ரஜினியின் மருமகன் என்பதை தாண்டி சுயமாக உழைத்து கடுமையாக உழைத்து என்பதுதான் சரியாக இருக்கும் அப்படி முன்னேறிய தனுஷ் பற்றிய இந்த செய்தியானது நொறுக்கு தீனியை போல சும்மா கிடந்த வாய்களுக்கு அவல் கொடுத்த மாதிரி. எப்படியோ நோக்கம் நிறைவேறியது. இந்த மாதிரியான பார்ட்டிகள் ஐ டி க்களில் அதிகம் உள்ளதே. தவறான பார்வையாளர்களுக்கு அது குஷியாக தெரியும் வறுத்தேடுக்க


Thiru, Coimbatore
ஜூலை 04, 2025 15:14

கருப்பன் குசும்புகாரன்... ஆனா அதிர்ஷ்டகாரன்...


RAAJ
ஜூலை 04, 2025 14:46

அவர் பல சரக்கு கடைக்காரர் அவரிடம் சரக்கு மிடுக்கு எல்லாம் உள்ளன உங்களுக்கு ஏன் வயிற்று எரிச்சல்


தியாகு
ஜூலை 04, 2025 13:53

டுமீல் சினிமா விசிலடிச்சான் ரசிக கிறுக்கு கண்மணிகள் இருக்கும் வரையில் தனுஷ் போன்ற போலி நடிகர்ளுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. தமிழ் இளைஞர்களை மிக அதிகம் குடி பழக்கத்திற்கும் போதை பழக்கத்திற்கும் நாடக காதலுக்கும் வன்முறைக்கும் பாதை மாற்றியதில் இந்த தனுஷ் படங்களும் ஒரு காரணம்.


Rajakumar
ஜூலை 09, 2025 10:08

சரியாயானா கருது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை