உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வைர வியாபாரி சோக்சி மனு நிராகரிப்பு: மும்பை ஆர்தர் சிறையில் தயாரானது அறை

வைர வியாபாரி சோக்சி மனு நிராகரிப்பு: மும்பை ஆர்தர் சிறையில் தயாரானது அறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரஸ்ஸல்ஸ்: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, வைர வியாபாரி மெஹுல் சோக்சி தாக்கல் செய்த மனுவை, பெல்ஜியம் நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'அவர் இந்தியாவில் செய்த குற்றங்கள், பெல்ஜியம் நாட்டிலும் குற்றமாகவே கருதப்படுகின்றன' என, நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, சோக்சியை அடைப்பதற்காக மும்பை ஆர்தர் சாலை சிறையில், அறை தயாராக உள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி, 2019ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பி சென்றார். அங்கிருந்து, கரீபிய தீவு நாடான ஆன்டிகுவா சென்று குடியேறினார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெஹுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சோக்சியை பெல்ஜியம் போலீசார் கடந்த ஏப்ரலில் கைது செய்து, அந்நாட்டு சிறையில் அடைத்தனர். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சோக்சி தாக்கல் செய்த மனு, ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சோக்சியின் இனம், மதம், தேசியம் அல்லது அரசியல் தொடர்புக்காக அவரைத் தண்டிக்கும் நோக்கத்துடன் நாடு கடத்தல் கோரிக்கை விடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் மனுவில் இல்லை. அதேசமயம், அவர் மீது இந்திய அதிகாரிகளால் பட்டியலிடப்பட்ட குற்றங்கள், குற்றவியல் சதி, ஏமாற்றுதல், மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்டவை பெல்ஜியம் நாட்டு சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கக் கூடியவையே. நாடு கடத்தலுக்கு எதிராக மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள், விபரங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல. நாடு கடத்தப்பட்டால் மோசமாக நடத்தப்படுவார் என்பதற்கான ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதி செய்துள்ளதால், அவர் எந்த நேரத்திலும் அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயார் நிலையில்

'சிறை எண் 12'

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சோக்சி, மஹாராஷ்டிராவின் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகிஉள்ளது. 'இந்திய சிறைகள் மோசமாக இருக்கும், அங்கு உரிய பாதுகாப்பு இல்லை' என சோக்சி கூறியிருந்த நிலையில், அவருக்காக தயார் செய்யப்பட்ட சிறையின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. உயர் பாதுகாப்பு உள்ள ஆர்தர் சாலை சிறையில், சோக்சிக்கு, 12ம் எண் சிறை ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை தேவைகள் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய காற்றோட்டமான இரு அறைகள் உள்ளன. மூன்று மின் விசிறிகள், ஆறு டியூப் லைட்டுகள் மற்றும், 'டிவி'யும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Iyer
அக் 23, 2025 05:16

MEHUL CHOKSI , NIRAV மோதி, மல்லையா போன்றவர்கள் திரும்பி வந்தால் - அவர்களுக்கு BANK LOAN கொடுத்து அதில் கமிஷன் வாங்கிய - மன்மோகன், சிதம்பரம், பப்பு போன்றவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை