வாசகர்கள் கருத்துகள் ( 17 )
எதற்கு
பகவத் சில நேரங்களில் சொல்லும் கருத்துக்கள் பாஜகவுக்கு மட்டுமல்ல RSSக்கும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. உதாரணமாக எல்லா குடும்பங்களிலும் சமஸ்கிருதம் பயன்பாட்டு மொழியாக இருக்கனும் என்கிறார். இந்து தர்மம் என்று அனைவரையும் அரவணைத்து சொல்லாமல் சனாதனமே இந்து மதம் என்ற பார்வையை முன் வைக்கிறார். இவை பற்பல பிரிவுகள் மற்றும் தத்துவங்கள் கொண்ட இந்து மதத்திற்கு முரணாகி அது இந்து ஒற்றுமைக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. RSS இயக்கத்தின் தேசிய உணர்வு மிகவும் போற்றத்தக்கதே.
RSS தான் பிஜேபியின் முதுகெலும்பு. ஆனால் இந்த இரு அமைப்புகளும் இந்திய தேசம் மற்றும் கலாசார மேம்பாடுகளை பற்றிய அவர்கள் பார்வைகளை தெளிவாக மக்கள் முன்பு வைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இவர்களை ஆதரிக்கும் பெரும்கூட்டம் அவர்களாக ஏதேதோ கற்பனை செய்துகொண்டு, பிறகு அவை ஒன்றும் நடக்காதபோது ஏமாற்றமடைந்து வெறுப்படைகிறார்கள். இன்றுவரை எதிர்க்கட்சிகளில் உருப்படியான தலைவர்களோ, சித்தாந்தமோ இல்லாததால், உள்ளதுக்குள் நல்ல கட்சி நல்ல தலைமை என்ற அடிப்படையில் பிஜேபி யை வேறுவழியின்றி ஆதரித்துவருகிறார்கள். இதனால், பிஜேபி தலைமைக்கும் தங்கள் சித்தாந்தங்களையம் அவற்றை செயலாற்ற காலவரைமுறைகளையும் எடுத்துரைக்கவேண்டிய அவசியமோ அவசரமோ இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் ஆளுக்காள் அவ்வப்போது அவர்கள் நினைப்பதை கட்சியின் கொள்கை போல் சொல்லிவருகிறார்கள். அதன் வெளிப்பாடுகளில் ஓன்றுதான் பாகவத்தின் சமீபத்திய பேச்சு.
நீங்கள் யாருய்யா
RSS நாக்பூர் சேர்ந்த இயக்கம் என்பதை விட்டு வெளியில் வர வேண்டும். ஒரு முதியவர் இயக்கம் என்பதை மீறி, இளைஞர்களை தலைமை பதவியில் அமர்த்துவது மட்டுமல்லாமல், தென்னாடு, வடகிழக்கு மாநிலங்கள் சேர்ந்த இளைஞர்களை, பல சமுதாயத்தை சேர்ந்த மக்களை பிரதிநிதித்துவபடுத்துவதன் மூலம் RSS தன்னை உண்மை பலத்தை கண்டுகொள்ள முடியும்.
எதற்கு
ஆர் எஸ் எஸ் கொள்கை, சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் ஒரு இயக்கம். இத்தனை நாட்கள் இவர்கள் ஒத்துப் போயிருப்பதே ஆச்சரியமான விஷயம்!
கருப்பு கண்ணாடியை மாட்டிண்டு இருப்பவன் கண்ணாடியை கழட்டியவுடன் ஒரு ஒளி கண்களில் பளீரென்று விழும். அதை அவன் ஆச்சரியமாக இருக்கே என்பான். இந்த கருப்பு கண்ணாடி அதே வகையை சேர்ந்ததுதான்.
உண்மையில் தலைவர் பொறுப்பை ஏற்க முக்கியஸ்தர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் பொறுப்பு டென்சன் அதிகம்.
மத்தியில் 11 ஆண்டு தொடர் ஆட்சி... 17 மாநிலநாளில் பிஜேபி ஆட்சி... ஹிந்து கோவில்களை அரசின் பிடியில் இருந்து மீட்க ஆர் எஸ் எஸ் எடுத்த முயற்சி என்ன ?
தமிழகத்தின் 90 சதவீத ஆலையங்களின் அறங்காவலர் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. மற்றபடி பெரும்பாலான மாநிலங்களில் ஆதீனங்கள், ஆஸ்திக தலைவர்கள் மற்றும் பண்டாக்கள் தான் ஆலயங்களை நிர்வகித்து வருகின்றனர்.
Your comment is correct
RSS இல்லாமல் பாஜக இல்லை.,பதவியைவிட கொள்கை பெரியது.