உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் கைதுக்கு சட்டத்தில் இடமில்லை! பெங்., போலீஸ் கமிஷனர் தயானந்தா தகவல்

டிஜிட்டல் கைதுக்கு சட்டத்தில் இடமில்லை! பெங்., போலீஸ் கமிஷனர் தயானந்தா தகவல்

பெங்களூரு: ''நமது சட்டமும், அரசியலமைப்பிலும், 'டிஜிட்டல்' கைது என்ற நடைமுறை எதுவும் இல்லை. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,'' என, நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:நாட்டில் எந்த புலனாய்வு துறையும், 'டிஜிட்டல்' கைது செய்வதில்லை. அச்சுறுத்தல் அழைப்பு தொடர்பாக, பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஒருவரை கைது செய்ய நோட்டீஸ் கொடுத்தோ அல்லது நேரடியாக சந்தித்து கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. கைது செய்யப்படுவோர், 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.ஆனால், நமது சட்டத்தில் 'டிஜிட்டல்' கைது என்பதை இல்லை. இதுதொடர்பாக எந்த நடைமுறையும் இல்லை. மக்களுக்கு சட்டம் தொடர்பாக சிறிதளவு தெளிவு இருந்தால், ஆன்லைன் மோசடியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்ச தேவையில்லை.யாராவது உங்களை தொடர்பு கொண்டு கைது மிரட்டல் என்று கூறினால், உங்கள் பகுதியில் உள்ள போலீசை தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான தகவலை அவர்கள் அளிப்பர்.அரசின் எந்த புலனாய்வு துறையும், வீடியோ கால் மூலம் விசாரணை நடத்தமாட்டார்கள். முதலில் அவர்கள் நோட்டீஸ் அனுப்புவர் அல்லது நேரடியாக வந்து விசாரணை நடத்துவர்.கர்நாடகாவில் நவம்பர் வரை ஆன்லைன் மூலம் மோசடி செய்ததாக, 641 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், 109 கோடி ரூபாய் இழந்துள்ளனர். இதில், 480 வழக்குகள் பெங்களூரில் நடந்துள்ளது. 42.4 கோடி ரூபாயில், 9 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

டிஜிட்டல் கைது என்றால் என்ன?

டிஜிட்டல் கைது என்பது ஆன்லைன் மோசடியாகும். மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏமாற்றி மோசடி செய்வோரை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தங்களை போலீஸ், சி.பி.ஐ., வருமான வரி அதிகாரிகள் என கூறி, 'உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தண்டனையில் இருந்து தப்பிக்க, பணத்தை அனுப்புங்கள்' என பயமுறுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

G.Sasikumar
டிச 25, 2024 18:39

எனக்கு இது போன்ற கால் வந்துச்சி . என் மேல பெங்களூர் கார் ஆக்சிடென்ட் கேஸ் இருக்குனு. நான் ஒரு போதும் பெங்களூர் கார் ஓட்டுனதே இல்ல . நான் கால் பண்ணிட்டேன் .


அப்பாவி
டிச 25, 2024 14:28

சி.பி.ஐ, போலுஸ் நு சொல்லிக்கொண்டு ட்டு போலீஸ் வேஷத்தில் வந்து ஆட்டையப் போடுறவங்களைப் பிடிக்க துப்பிருக்கா? தண்டிக்க நீதிமன்றங்களுக்கு துப்பிருக்கா? ஃப்ராடு செய்யும் போலுசை ஆயுதப் படைக்கு மாத்தும் கேவலமான முடிவுக்கு மாற்று இருக்கா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை