வாசகர்கள் கருத்துகள் ( 1 )
reels படுத்தும் பாடு.
மேலும் செய்திகள்
மகா கும்பமேளாவுக்கு 77 நாடுகளின் தூதர்கள் வருகை
01-Feb-2025
பிரயாக்ராஜ்: கும்பமேளாவில் புனித நீராடிய பெண் ஒருவர், கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டே மொபைல் போனை தண்ணீரில் மூழ்கடித்து எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்ப மேளா நாளை நிறைவு பெறுகிறது. நாடு முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். நேரில் செல்ல முடியாத பக்தர்களுக்காக, அவர்களது போட்டோவை திரிவேணி சங்கமத்தில் மூழ்க வைத்து, அதற்கு ஒரு கட்டணம் வசூலிப்பதும் நடக்கிறது.இந்நிலையில், பெண் ஒருவர் புனித நீராடும்போது, மொபைல் போனை திரிவேணி சங்கமத்தில் மூழ்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்தப் பெண், தனது கணவரிடம் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கிறார். பேசியபடியே தனது மொபைலை தண்ணீரில் முக்கி எடுக்கிறார்.ஷில்பா சவுகான் என்ற அந்த பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், தனது கணவர் திரையில் தெரியும்படி வைத்து, தனது மொபைலை தண்ணீரில் மூழ்கடிக்கிறார். இது, கணவர் நேரில் வந்து புனித நீராடியதற்கு சமம் என்கிறார் அவர்.இந்த வீடியோ இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
reels படுத்தும் பாடு.
01-Feb-2025