உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடி: போலீஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடி: போலீஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: 'டிஜிட்டல்' மோசடிகள், 'சைபர்' குற்றங்கள், ஏ.ஐ., தொழில்நுட்பங்களால் அரங்கேறும், 'டீப் பேக்' மோசடிகளால், சமூக மற்றும் குடும்ப உறவுகள் சீர்குலைக்கப்படுவது கவலை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.நாடு முழுதும் உள்ள போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்களின் 59வது அனைத்திந்திய மாநாடு, ஒடிசாவில் மூன்று நாட்கள் நடந்து முடிந்தது. இதன் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:டிஜிட்டல் மோசடிகள், சைபர் கிரைம்கள் மற்றும் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக அரங்கேறும் அச்சுறுத்தல்களுக்கு எதிர் நடவடிக்கையாக, நம் நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், லட்சிய இந்தியா என்ற இரட்டை ஏ.ஐ.,யை பயன்படுத்தும்படியும், இந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றும்படியும் போலீஸ் தலைமைக்கு அழைப்பு விடுக்கிறேன்.தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலீசின் பணியை சுலபமாக்குவது அவசியம். நகர்ப்புறங்களில் போலீஸ் பணி மேம்படுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இவற்றை நாட்டின் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்.டிஜிட்டல் மோசடிகள், சைபர் குற்றங்கள் அதிகரிக்க துங்கியுள்ளன. ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் பேக் மோசடிகள் சமூக மற்றும் குடும்ப உறவுகளை சீர்குலைக்கின்றன. இது மிகுந்த கவலை அளிக்கிறது. அதே தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதை முறியடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
டிச 02, 2024 16:35

இருக்கிற போலீசெல்லாம் அஞ்சடுக்கு, ஆறடுக்கு பாதுகாப்புக்கே சரியாப் போகுது. இதுலே சைபர் ஃப்ராடை எங்கே யார் கண்டுபிடிப்பது?


GMM
டிச 02, 2024 10:01

டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றம் அதிகரிப்பு. சவாலை மாநில அரசியல் போலீஸ் தனக்கு வாய்ப்பாக பயன் படுத்தி கொள்ளும். நிர்வாகம், காவல் தனித்தனியாக இருக்க வேண்டும். காவல் உடல் ஆரோக்கியம் , நிர்வாகம் மூளை திறன் சார்ந்தது . பொருளாதாரம், தேச பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காங்கிரஸ் நீதிமன்றத்திற்கு கொடுத்துள்ள அதிக அதிகாரம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பை திணற செய்து வருகிறது. போலீஸ் இட்ட பணியை செய்ய வேண்டும். போலீசுக்கு நிர்வாக பணிகள் அதிகரித்தால், கவலை அதிகரிக்கும். வங்கிகள், தொழில் நுட்பம் குழு, தொலை தொடர்பு அதிகாரிகள் அரசு நிர்வாகத்துடன் இணைந்து ஒரு கண்காணிப்பு, தடுப்பு அமைப்பு செயல்பட வேண்டும்.


Narayanan Muthu
டிச 02, 2024 09:26

அதை விட EVM மோசடி அதிக கவலை அளிக்கிறது.


hari
டிச 02, 2024 10:48

ஆமாம் வயநாடு EVm மோசடி சொல்றாரு


KRISHNAN R
டிச 02, 2024 07:20

ஆதார் அட்டை வங்கி கணக்கு இணைப்பால் வந்த வினை. வீட்டுக்கு வீடு டிஜிட்டல் புரட்சி. தரவு பாதுகாப்பு இல்லை.


Padmasridharan
டிச 02, 2024 06:17

"காவல் துறையில் இலஞ்சம் வாங்கறதும், அதே டிஜிட்டல் முறைலதான் நடக்கின்றது" இந்த thamizh செய்தியில் ஒரு பிழை "துவங்கியுள்ளன" என்பது ❌துங்கியுள்ளன❌ என்றுள்ளது. சரி பார்த்து தமிழை வளர்க்கவும் ??


Kasimani Baskaran
டிச 02, 2024 06:11

மோசடி செய்ய தமிழ் பேசுபவர்கள் கூட வெளிநாடுகளுக்கு ஸ்கேம் ஆர்டிஸ்ட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.


Raj
டிச 02, 2024 05:50

நீங்கள் தான் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லுவீர்களே.... எல்லா விஷயத்திற்கும் பேங்க் அக்கௌன்ட்டை இணைக்க வேண்டும்.....டிஜிட்டல் திருடர்களுக்கு வசதியாக போய்விட்டது. பணத்தை இழந்தவனுக்கு தான் தெரியும் இந்த வலி.


கருணாசலம்
டிச 02, 2024 05:26

நைஜீரியாவுக்கே பெப்பே காட்டறோம். டிஜிட்டல் புரட்சி. நல்ல வேலை வாய்ப்பு. லட்சம், கோடிகளில் சம்பளம்.


hari
டிச 02, 2024 06:32

கருணசளம் இன்னொரு அப்புசாமி.....கொண்டை தெரியுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை