உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடனை வசூலிக்கும் போது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்; நிர்மலா சீதாராமன்

கடனை வசூலிக்கும் போது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்; நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடனை திருப்பி பெறும்போது வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை கடைபிடிக்க வேண்டும் என்று வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டில்லியில் நடந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மாநாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது; கடன்களை வசூலிக்கும் போது, வாடிக்கையாளர்கள் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடத்தப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றி கடன்களை வசூலிக்க வேண்டும்.ரூ.500 கடனை செலுத்தாதவர்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் கடினமாக நடந்து கொண்டதாக பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. நீங்கள் உங்களின் வேலையைத் தான் செய்கிறீர்கள் என்பது தெரியும். ஆனால், மனசாட்சி இல்லாமல் செயல்படக் கூடாது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வங்கிகளால் வழங்கப்படும் மொத்த கடனில் 24% மட்டுமே வழங்குகின்றன. இதை 2047ல் குறைந்தது 50% ஆக உயர்த்த வேண்டும். 'விக்சித் பாரத் 2047' இலக்கை அடைய உதவும் வகையில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். 2021ல் ரூ.24 லட்சம் கோடியாக இருந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அளித்த கடன் தொகை, 2025ல் ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது இரட்டிப்பாகும். 2047ல் வங்கிகளின் வழங்கும் கடன் தொகையில் 50 சதவீதம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கி விட வேண்டும். அதிக வளர்ச்சி தரக்கூடிய சிறு,குறு, தொழில் நிறுவனங்கள், க்ரீன் எனர்ஜி உள்ளிட்ட துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Selvaraj Thiroomal
ஜூலை 10, 2025 13:00

வட்டி அளவாக நியாயமாக வாங்கவும் அம்மையார் வலியுறுத்தினார். வட்டி, அபராதம் போன்றவைகளுக்கு, 18% ஜிஎஸ்டி விதிப்பதும் மிகமிக அநியாயம் அல்லவா? வங்கிகள் SMS அலர்ட்டுகள் தருவதற்கு ஒரு கட்டணம் வசூலித்தால் அதற்கும் ஜிஎஸ்டி. மேலும் வசதி இல்லாத காரணத்தால் கடன் வாங்கினால் அதை EMI மூலம் கட்டினால், அந்த மாதாந்திர தொகையின் வட்டிக்கும் ஜிஎஸ்டி, அந்த கடனை process பண்ணுகிறார்களாம், அதற்கு ஒரு கட்டணம், அதே கட்டணத்திற்கு ஒரு ஜிஎஸ்டி. இல்லாதவரிடம் தான் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சுரண்டி வாழ்கின்றன. Current account வைக்க வேண்டிய நிர்பந்தம் சிறு சிறு வர்த்தக தொழில் நிறுவனங்களுக்கு கூட அவசியம் என்ற நிலையில், அந்த கணக்கில் இருந்து சுரண்டுவது, கணக்கில்லாதது. எதற்கு எடுத்தாலும் சேவை கட்டணம் , அதற்கு ஒரு ஜிஎஸ்டி.... வட்டி, சேவை கட்டணம், அபராதம், அனைத்திற்கும் ஜிஎஸ்டி,, சுரண்டலோ சுரண்டல்,,,, அதுவும் இல்லாதவர்களிடம்...


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 16:35

திமுக ஆட்சியில் இருந்த வங்கிப் பரிமாற்றங்களுக்கான சேவை வரிதான் இப்போது ஜிஎஸ்டியாக மாறி உள்ளது. முன்பு வாயைப் பொத்திக்கொண்டிருந்தவர்கள் இப்போ கூச்சலிடுவது ஏன்?எல்லா மாநில அரசுகளும் சேர்ந்து ஒருமித்த கருத்துடன்தான் ஒவ்வொரு சேவைக்கும் ஜிஎஸ்டியை முடிவு செய்கின்றன. அநியாய வசூல் என நினைத்தால் அதில் பங்கு வேண்டாம் எனக் கூறலாமே.


JaiRam
ஜூலை 10, 2025 12:59

கடனை வசூலிக்க சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் இதில் என்ன கண்ணியமானமுறை அவர்கள் செய்வது அனைத்தும் சட்ட விரோதம் அதற்கு இந்தம்மா சப்போர்ட் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாத அம்மா


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 12:07

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களான கார்பரேட் நிறுவனங்களின் நீண்டகால நலனையும் பார்த்தே கடன் வசூலில் நெளிவு சுளிவுடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால் எதிர்கட்சிகளுக்கு பயந்து அரசுத்துறை வங்கிகள் வசூலில் அநாவசிய கடுமை காட்டுகின்றன . எல்லாத் தொழில்களிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எனவே எல்லா சூழ்நிலைகளிலும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி இருக்கும். கடன் கட்ட இயலாமல் தவிப்பார்கள் எல்லாருமே திருடர்களில்லை. அவர்கள் மூலம் முற்காலத்தில் ஈட்டிய வட்டி, வரி வருமானங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.


R Dhasarathan
ஜூலை 10, 2025 12:06

அநியாயமா வரி வசூலிக்கும் போது கண்ணியம் இல்லை.


Anantharaman Srinivasan
ஜூலை 10, 2025 11:50

முடிந்தால் கடன் வாங்கியவர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி போல் தப்பிச்செல்ல வழி சொல்லித்தர வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 11:58

தொலைபேசி மூலம் வங்கித் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து கடன் கொடுக்க வைத்தது வேட்டி அணிந்த தமிழர். கோர்ட் உத்தரவு இல்லாமல் யாரையும் வெளிநாட்டுக்குச் செல்லாமல் தடுக்க முடியாது. கோர்ட் யாருக்கு சாதகமாக என்பதை செல்லவே வேண்டாம்.


அப்பாவி
ஜூலை 10, 2025 11:12

இருக்கிற பொதுத்துறை வங்கி வேலைகள் 90 சதவீதம் கண்ணியமா காலி பண்ணியாச்சு. இனிமே இஸ்ரேலுக்கு சிற்றாள் வேலைக்குதான் போகணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை