உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலிவுட்டை விட்டு வெளியேறினார் டைரக்டர் அனுராக் காஷ்யப்!

பாலிவுட்டை விட்டு வெளியேறினார் டைரக்டர் அனுராக் காஷ்யப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பாலிவுட்டின் பிரபல டைரக்டர் மற்றும் நடிகருமான அனுராக் காஷ்யப் மும்பையை விட்டு வெளியேறினார்.அனுராக் காஷ்யப் பிளாக் பிரைடே , தி லன்ச் பாக்ஸ் , கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் ஆகிய திரைப்படங்களால் அறியப்பட்டவர். 1993 மும்பை குண்டு வெடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவரது பிளாக் பிரைடே என்கிற திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்றதுடன் பல சர்ச்சைகளையும் உண்டாக்கியது.தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனுராக் காஷ்யப், அதன் பிறகு விடுதலை-2 லியோ, காஷ்மோரா மற்றும் மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் அனுராக் காஷ்யப் அளித்த பேட்டியில் கூறியபோது, நான் பாலிவுட்டிலிருந்து விலகி இருக்க விரும்புகிறேன். இந்த துறை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. அனைவரும் ரூ.1000 கோடி சம்பாதிப்பதை நோக்கிச்செல்கிறார்கள். படைப்பு திறனுக்கு மதிப்பில்லை.இவ்வாறு அனுராக் காஷ்யப் கூறியிருந்தார்.இந்த நிலையில் பாலிவுட் சினிமா மற்றும் மும்பையை விட்டு வெளியேறி, பெங்களூருவில் வாடகை வீட்டில் குடியிருப்பதாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
மார் 06, 2025 21:52

போயி குற்றிமாறனுடன் இருந்துவிடு


தத்வமசி
மார் 06, 2025 19:18

எங்க அண்ணன் சித்திரக் குள்ளனும் அண்ணியும் கூடத் தான் இங்கிருந்து வெளியே சென்று செட்டில் ஆனார்கள். நாங்கள் வருந்தினோமா ? செய்திகளில் குதித்தோமா ? அட போங்கப்பா... திறமை இருப்பவன் எங்கும் சிறந்து விளங்குவான். அந்த காஷ்மோரா.. படமாயா அது..


Sundaram Bhanumoorthy
மார் 06, 2025 18:16

தேவையில்லாத ஒரு வோக் ஆணி தானாகவே பிடுங்கி கொண்டது


Jambavaan
மார் 06, 2025 17:46

ஐய்யஹோ இந்த செய்தி கேட்டவுடன் இந்த உலகமே ஸ்தம்பித்தது விட்டதே என்ன செய்ய?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை