அரசு மருத்துவமனைகளில் தூய்மை ஆய்வு செய்ய இயக்குனரகம் உத்தரவு
புதுடில்லி:தூய்மை, சுகாதாரத்தை உறுதி செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதுடில்லி அரசின் சுகாதார சேவைகள் இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:அரசு மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் நிர்வாகத்தில் உள்ள மருத்துவமனைகளில் வார்டுகள், கழிப்பறைகள், நோயாளிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தை முழுதுமாக ஆய்வு செய்ய வேண்டும்.நேரம் தவறாமல் அட்டவணைப்படி துப்புரவுப் பணிகள் செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் தொற்று பரவாமல் தடுக்க துப்புரவுப் பணி மற்றும் சுகாதாரம் மிகவும் அவசியம்.ஏதேனும் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை உடனடியாக சீர்படுத்த வேண்டும்.ஆய்வு குறித்த விரிவான அறிக்கையை, சுகாதார சேவைகள் இயக்குனரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.புகைப்பட ஆதாரங்கள் மற்றும் ஆய்வின் போது அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் குறித்த நடவடிக்கை அறிக்கை ஆகியவற்றையும் அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும்.அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சுத்தமான, பாதுகாப்பான மற்றும் கண்ணியமான சூழல் இருப்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.