உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொடியேற்ற விடாமல் தடுத்தவர் பணிநீக்கம்

கொடியேற்ற விடாமல் தடுத்தவர் பணிநீக்கம்

போபால்: மத்திய பிரதேசத்தின் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள தரேனா கிராமத்தில் கடந்த 26ல் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.அப்போது கிராம பஞ்சாயத்து தலைவரான மான்சிங் வர்மா கொடியேற்ற வந்தார். அப்போது அங்கிருந்த கிராம பஞ்சாயத்து அலுவலக வேலைவாய்ப்பு உதவியாளரான லகன் சிங் லோந்தியா, அவரை கொடியேற்ற விடாமல் தடுத்தார். அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வேறொரு நபர் தேசியக் கொடியை ஏற்றினார். இதுகுறித்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மான்சிங் புகார் அளித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், லகன் சிங் மீதான புகார் உறுதியானதை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த தகவலை மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி அக் ஷய் தெம்ரவால் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை