உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தி.மு.க.,வும், காங்கிரசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி

தி.மு.க.,வும், காங்கிரசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி

கோவை: ''கச்சத்தீவை கொடுத்ததற்கு தி.மு.க.,வும் காங்கிரசும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்க வேண்டும்'', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நன்றி

கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அப்பகுதி மக்கள் இன்று இரவு நம்மதியாக தூங்கப் போகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4zchpz2b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=05,300 ஆண்டுகளுக்கு முன் இரும்பு பயன்பாடு தமிழகத்தில் இருந்தது என்ற ஆதாரத்தை முதல்வர் முன்வைத்துள்ளார். இது ஒவ்வொரு தமிழனுக்கும் சந்தோசமான விஷயம். தமிழனாக பெருமைப்பட்டு கொள்வோம்.

தி.மு.க., தூண்டுதல்

திருப்பரங்குன்றம் முருகனின் ஸ்தலம். ஆண்டாண்டு காலமாக எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும் ஸ்தலம். 1931ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு தெளிவாக உள்ளது. தி.மு.க., தூண்டுதலின் பேரில், எம்.பி., நவாஸ் கனி பிரச்னையை உருவாக்குகிறார். திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து பா.ஜ., பெரிய இயக்கத்தை நடத்தும்.ஒரு எம்.பி., மதமோதலுக்கு காரணமாக இருக்கிறார். மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

நம்பிக்கை

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது முட்டாள்தனமானது. நாட்டின் எல்லையை திருத்துவதற்கு அரசியலமைப்பின் முதலாவது சட்டப்பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், செய்யவில்லை. கச்சத்தீவை கொடுத்ததினால், இந்தியாவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒன்றும் கிடைக்கப்போவதும் இல்லை. ஒப்பந்தம் போட்ட போது முதலில் அங்கு மீனவர்கள் வலையை உலர்த்திக் கொள்ளலாம் என நாடகம் போட்டனர். பிறகு அதனை ரத்து செய்துவிட்டனர்.கச்சத்தீவை கொடுத்ததற்கு தி.மு.க.,வும் காங்கிரசும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவு குறித்து பிரதமர் பேசுகிறார் என்றால், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு உறுதுணையாக நிற்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால், பிரதமர் பேச மாட்டார்.

நேரமில்லை

நாங்கள் ஈ.வெ.ரா.,கொள்கையை ஏற்கவில்லை என்றாலும் அவரை அவமானப்படுத்த மாட்டோம். மக்கள் அவரை மறந்து விட்டனர். புது தலைமுறை வந்துள்ளது. அவர்களின் அரசியல் மொழி வேறு. சீமான் வேறு மாதிரி அணுகுமுறையை கொண்டு உள்ளார்.ஈ.வெ.ரா.,வை தாண்டி எங்கோ சென்றுவிட்டோம். வளர்ச்சி அரசியல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான அரசியல் பேசவே எங்களுக்கு நேரமில்லை.

பொய்

முதல்வர் நிறைய பொய் பேச ஆரம்பித்து விட்டார். தேர்தல் வர இன்னும் ஒரு வருடம் உள்ளது. தேர்தலுக்கு முன்பு ஒரு வருடம் பொய் பேசினார். 3 வருடம் பொய் பேசாமல் இருந்தார். இப்ப பொய் பேசுவதற்கு நேற்று துவங்கிவிட்டார். தேர்தல் வாக்குறுதியை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லாத ஒரு கட்சி தி.மு.க., வெள்ளை அறிக்கை கொடுப்பதில் என்ன பிரச்னை. வெள்ளை அறிக்கை கொடுத்தால் பிரச்னை தீர்ந்துவிடும். இதை செய்யாதவரை தி.மு.க.,வை மக்கள் நம்ப போவது கிடையாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

அப்பாவி
ஜன 24, 2025 10:45

கச்சத்தீவு இந்தியாவை விட இலங்கைக்கு அருகாமையில் இருக்கிறது. கச்சத்தீவை கொடுத்ததின் மூலம் பல்லாயிரக்கணக்கான சதுரகிலோமீட்டர்கள் கடல்பரப்பை பெற்றிருக்கிறோம். இதெல்லாம் தெரிஞ்சு ஒன்றிய அரசோ, மோடியோ ஒன்றும் பேசுவதில்லை.


நிக்கோல்தாம்சன்
ஜன 25, 2025 04:36

அப்போ துண்டு சீட்டு எனப்படும் பிட்டு பேப்பரை வைத்து வாழ்க்கை நடத்தும் மனிதனை ஒன்றியம் என்றும் , மத்திய அரசை மோடி அரசு என்றும் தனித்தனியா குறிப்பிட்டுள்ளீர் , படிக்கும் காலத்தில் படிக்கும் வாய்ப்பிருந்தும் பிட்டு அடித்து கூட பாஸ் செய்யமுடியாத அளவிற்கு இருந்தவனை எல்லாம் பதவியில் அமர்த்தினால் அவன் என்ன செய்வான் பாவம்


Kasimani Baskaran
ஜன 24, 2025 05:53

ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டுவந்தது காங்கிரஸ் + தீம்க்கா, கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் + தீம்க்கா, 2ஜி யில் கொள்ளை அடித்தது காங்கிரஸ் + தீம்க்கா, டங்ஸ்டன் சுரங்கம் குத்தகை என்று ஆரம்பித்தது தீம்கா, பாஜக நீட்டை நீக்கவேண்டும், கச்சத்தீவை மீட்கவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜன 24, 2025 05:41

இங்க இருக்குற திருப்பரங்குன்றத்தையே தீவிரவாதிகள் கையில் கொடுத்துட்டாங்க, இதில் கச்சத்தீவை கேட்க போறாராரம்


AMLA ASOKAN
ஜன 23, 2025 22:45

இலங்கை அரசு தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்தால் மட்டுமே அவர்களை சிறைபிடிக்கும் . இது அணைத்து நாடுகளுக்கும் பொருந்தும் . கச்சத்தீவை மீண்டும் பெற்றுவிட்டால் இலங்கை மீன்கள் அனைத்தும் இந்திய பகுதிக்குள் வந்து விடப் போவதுமில்லை , நம் மீனவர்கள் அத்தோடு திரும்பப் போவதுமில்லை . கட்சத் தீவு மீட்பு 1974ல் தொடங்கி இன்று வரை 50 ஆண்டுகளாக தேர்தலுக்கு தேவைப்படும் அரசியல் கறிவேப்பிலை . மத்திய அரசுக்கும் அதை மீட்க துப்பில்லை .


Mediagoons
ஜன 23, 2025 22:06

இவ்வளவு நாட்கள் இவர்களின் தூக்கத்தை கலைத்தது யார்?


தமிழ் மைந்தன்
ஜன 23, 2025 22:01

நான்கூட முதல்வர் அந்த பூனைமேல் மதில் பழமொழியை புரிந்து விட்டார் என நெனைத்தேன்


Mediagoons
ஜன 23, 2025 21:28

கச்ச தீவை மீட்காததற்கு பாஜவும் NDA வும் மன்னிப்பு கேட்கவேண்டாமா?


Raj S
ஜன 23, 2025 23:50

கடனா குடுத்ததை மீட்கலாம், திருட்டு பசங்க எழுதி குடுத்துட்டானுங்க... இதையெல்லாம் புரிஞ்சுக்க கொஞ்சம் தெளிவு வேண்டும்... டாஸ்மாக் போதைல இருந்தா புரியாது...


Svs Yaadum oore
ஜன 23, 2025 20:25

முள்ளிவாக்காலில் மட்டும் 1.5 லட்சம் ஈழ தமிழர்கள் படுகொலை ...இது யாருடைய ஆட்சி காலத்தில் நடந்தது?? ....அப்போது மத்தியிலும் இங்கு மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது யார்?? ..ஈழ தமிழர்களை நாடற்ற ஏதலி அகதி என்று கேவலமாக இப்போது பேசுவது யார் ...இந்த திராவிடனுங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது .....இவனுங்கதான் தமிழனுங்களாம் ..இதை கேள்வி கேட்க ப ஜ க வில் அப்போது ஆட்கள் கிடையாது ....ஆனால் அண்ணாமலை தவிர்த்து மற்ற ப ஜ க தலைவர்களுக்கு பதவி மட்டும் வேணும்


Barakat Ali
ஜன 23, 2025 19:40

கச்சத்தீவு போச்சே என்று எந்தத் தமிழனும் அழவில்லை ..... டீம்கா ஃபைல்ஸ் 3 ரிலீச்சு பண்ணுங்க .... அவனும் தொட்டுப்பாரு ன்னுதான் கூப்புடுறான் .....


சிட்டுக்குருவி
ஜன 23, 2025 19:28

ஒழிக்கபடவெண்டியதை பேசி தானே ஒழிக்கமுடியும்.சீமான் சீமான்தான்.அதை கட்சிதமாக செய்கின்றான் தம்பி.


முக்கிய வீடியோ