நீங்கள் பாடம் நடத்துவதா?
காங்., பிரதமராக இருந்த நேரு, இந்திரா ஆகியோர் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டனர். தற்போது, அக்கட்சியினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். வெளியுறவு கொள்கை பற்றி எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்.நிஷிகாந்த் துபே, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரு நாடுகள் மோதினால், பெரும் ஆபத்து ஏற்படும் எனக்கூறி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரை அவர் ஏன் இதுவரை தடுத்து நிறுத்தவில்லை?சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., உத்தவ் சிவசேனாராகுலுக்கு சவால்!
பீஹாரில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ராஷ்ட்ரீய ஜன தள தலைவர் லாலு, அம்பேத்கரின் உருவப்படத்தை தன் காலடியில் வைத்திருந்தார். இது, சட்டமேதை அம்பேத்கரை அவமதிக்கும் செயல். இந்த விவகாரம் தொடர்பாக, ராகுலுக்கு பகிரங்கமாக சவால் விடுக்கிறேன். லாலுவை கண்டித்து, ராகுல் அறிக்கை வெளியிட தயாரா?பிரஷாந்த் கிஷோர், தலைவர், ஜன் சுராஜ்