வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டாக்டர் எப்படி குற்றவாளியாக முடியும்? மருந்து தயாரிப்பவரின் தவறுக்கு டாக்டருக்கு தண்டனையா ?
போபால்: மத்திய பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகள் 11 பேருக்கு இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.ம.பி.,யின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களாக, 1 - 6 வயதுக்கு உட்பட்ட , 11 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்தன. அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன. இந்தக் குழந்தைகள், 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்ட்ரோ' ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டது தெரியவந்தது. இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்க தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் கோல்ட்ரிப் மருத்தை தயாரித்த ஸ்ரீசான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு வழக்குப் பதிவு செய்தது. இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல டாக்டரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.தற்போது குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் எப்படி குற்றவாளியாக முடியும்? மருந்து தயாரிப்பவரின் தவறுக்கு டாக்டருக்கு தண்டனையா ?