உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலிடம் பிரிட்டன் குடியுரிமையா: ஐகோர்ட்டில் மத்திய அரசு சொன்னது என்ன?

ராகுலிடம் பிரிட்டன் குடியுரிமையா: ஐகோர்ட்டில் மத்திய அரசு சொன்னது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரிட்டன் குடியுரிமை வைத்துள்ளதாக அலகாபாத் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.கர்நாடகாவை சேர்ந்த விக்னேஷ் சிசிர் என்பவர், அலகாபாத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ' காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரிட்டன் குடியுரிமை வைத்து உள்ளார். இதனால், அவரது இந்திய குடியுரிமையை பறிக்க வேண்டும். இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' எனக்கூறியிருந்தார். இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.இந்த வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: மனுதாரர் அளித்த மனு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த விஷயத்தை டிச.,19க்கு ஒத்தி வைக்க வேண்டும். அன்று இந்த மனு மீதான முடிவை அன்று தெரிவிப்பதாக கூறப்பட்டது.இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்பி பாண்டேவிடம், இந்த வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் 3 வாரங்களுக்குள் பதிலை பெற்று நீதிமன்றத்தில் அளிக்க கோர்ட் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 26, 2024 22:33

இப்படியே இந்தியாவில் பல வழக்குகள் வாரக்கணக்கில் தள்ளிப்போடப்பட்டு நீதி கிடைக்காமல் இருக்கிறது.


SANKAR
நவ 26, 2024 23:54

Modi degree case too!