உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிராமமே வக்புக்கு சொந்தமா?: திருச்சியை சேர்ந்தவர் மனு

கிராமமே வக்புக்கு சொந்தமா?: திருச்சியை சேர்ந்தவர் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டுமொத்த கிராமமும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீமான் சந்திரசேகர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:நான், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை கிராமத்தை சேர்ந்தவன். இங்குள்ள என் நிலம் உட்பட ஒட்டுமொத்த கிராமமும் வக்பு சொத்து என தமிழ்நாடு வக்பு வாரியம் உரிமை கோருகிறது. எங்கள் கிராமத்தில், 1500 ஆண்டுகள் பழமையான கோவில் உள்ளது. ஆனால், 1400 ஆண்டுகள் பழமையான முஸ்லிம் மதத்தின் வக்பு சொத்து என எங்கள் கிராமத்தை உரிமை கோருவது எந்த வகையில் நியாயம். கடந்த, 2022ல் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தன் மகள் திருமணத்திற்காக நிலத்தை விற்க முயன்றார். அப்போது தான் ஒட்டுமொத்த கிராமமும், ஐந்து கோவில்களும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவ்வாறு மனுவில் கோரப்பட்டு உள்ளது.உச்ச நீதிமன்றத்தில் உள்ள வக்பு வழக்குகளுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. -டில்லி சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

S.jayaram
மே 16, 2025 07:51

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் மக்களே, நம்மை முட்டாளாக்குவதும், மூட்டாலாக்கியதும் இந்த காங்கிரஸ் ஆட்சியும், அதனுடன் சேர்ந்த கட்சிகளுமே, அவர்களுக்கு துனைபோனதும், துணை போவதும் அரசு அதிகாரிகளே. முதலில் இஸ்லாமியர்கள் யார் இந்த மண்ணை சேர்ந்தவர்களா? அன்னியரா ? எங்கிறதில் இங்கேயுள்ள மக்களை இந்த அரசியல் கட்சிகள் தங்களது ஓட்டு வங்கிக்காக குழப்பி வைத்துள்ளனர். முதலில் இந்திய என்பது பல்வேறு சிறிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு துணைக்கண்டம். இதில் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு வழிபாடுகள் இருந்து வந்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை 6 சமயங்கள் ஒரே வழிமுறையில் வணங்கியதால் அதை ஹிந்து மதம் என்று கூறினார் அவை தவிர புத்தம், ஜைனம் ஆகியவை இதில் இருந்து பிரிந்தவை இவை மட்டுமே இம்மண்ணின் மதங்கள். இவற்றை சார்ந்தவர்களே இம்மண்ணின் அரசர்கள் ஆக. ஆட்சி புரிந்தனர் கிபி 11 ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் இங்கேயுள்ள மன்னர்களின் போட்டி மனப்பான்மையுடன் இருந்ததால் உள்ளே புகுந்தனர். அதிலும் 16 ம் நூற்றாண்டுவரை தக்காணதின் தெற்கே குறிப்பாக தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் உள்ளே வரவில்லை அதிலும் மாலிக்காபூரின் படையெடுப்பின் போதுமட்டுமே இங்கே வந்தனர் ஒரு 50 ஆண்டுகள் மட்டுமே அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அதன் பின் மீண்டும் இந்துக்களின் ஆட்சிக்கு வந்து விட்டது ஆனால் ஆங்காங்கே அவர்களின் எச்சங்கள் சில சிறிய பகுதிகளில் ஆட்சி புரிந்தனர். ஆனால் சுதந்திரம் பெறும்போது இஸ்லாமியருக்கு என ஒரு பெரும்பகுதி நிலத்தை தனிநாடாக பிரித்துக் கொடுத்த போதே இங்குள்ள நிலங்களின் சொத்துக்கள் மீதுள்ள உரிமைகள் ரத்தாகிவிட்டன எனவே அவை அனைத்தும் இந்நாட்டிற்கு தான் சொந்தம் அதை அன்றைய அரசு செய்யத்தவறியது அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு பிரிக்கப்பட்டபோது அங்கே போக விரும்பாமல் இங்கே தங்கிய இஸ்லாமியர்களுக்கு வக்பு வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி எங்கேயிருந்து புலம்பெயர்ந்த இஸ்லாமியரின்சொத்துக்களை அதன் வசம் ஒப்படைத்து அதை இஸ்லாமியர்கள் நிர்வாகம் செய்யும்படி செய்தது அன்றைய காங்கிரஸ் அரசு. அதன் பின் வந்த காங்கிரசின் இந்தியத்ரோக அரசு 2023 இல் ஒரு கடுமையான சட்டம் இயற்றியது அதன் விளக்கம் பின்வருமாறு வக்பு வாரியம் கைகாட்டும் சொத்துக்கள் அந்த வாரியத்தின் சொத்துக்கள் ஆகிவிடும் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்லமுடியாது. அந்த சொத்தை அனுபவிப்பர் தான் அதை தன்னுடைய சொத்து என்று நிரூபிக்க ஆதராவணங்கள் கொண்டுவரவேண்டும், வக்பு வாரியம் கைகாடினாலே போதும் ஆதாங்கள் தேவையில்லை என்ற கொடுமையான சட்டத்தை இந்த திமுக கட்சியின் கூட்டணியுடன் நிறைவேற்றியது. அதன் விளைவு தான் இப்போது உங்கள் ஊருக்கு வந்துள்ளது. இன்று ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை கேட்கும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் போது மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரம் பறிக்க முயற்சி என்கிறார், ஆனால் அன்று மன்மோகன்சிங் இந்த வக்பு சட்டம் கொண்டுவரும்போது இவர் துனைமுதல் மந்திரியாகத்தானே இருந்தார் அப்போது இது பெரும்பான்மை மக்களை பாதிக்கும் எனவே கோர்ட்டுக்கு செல்லமுடியாது என்ற சரத்தை நீக்கி கோர்ட்மூலம் தீர்வு காணலாம் என்று திருத்தி இருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை இவர்கள் தமிழக மக்களின் துரோகிகளே, அவர்கள் லாபத்திற்காக எதையும் பலிகொடுக்க தயங்க மாட்டார்கள். மீண்டும்,மீண்டும் அவர்களின் பசப்புவாரத்தைகள், நம்பி, அவர்கள்கொடுக்கும் பணத்தை வாங்கி வாக்களிக்காதீர்கள், வாக்களிக்காதீர்கள், இன்னும் மீதியுள்ள உரிமைகளையும் இழந்து விடாதீர்கள்.


S.jayaram
மே 16, 2025 06:36

அய்யா நீங்கள் கூறும் கிராமம் மன்னர்களால் கோவிலின் நன்மை கருதி ஏதாவது ஒரு கைங்கரியத்திர்க்காக மானியமாக ஒருவரிடம் ஒப்படைத்திர்க்களாம், ஆனால் அவருடைய காலத்திற்குப்பின் அந்த நபர் அந்த கைங்கர்யம் செய்வதை நிறுத்திவிட்டு அந்த நிலங்களை விற்றிருக்களாம் இது நடந்த 100 வருடங்கள் எல்லாம் ஆகியிருக்கும் அதில் வாங்கியவர்கள் வீடுகள் கட்டி குடியும் இருக்கலாம் காலம் காலமாக உள்ளட்சிகளுக்கு செலுத்தவேண்டிய வரிகளும் செலுத்தியிருக்கலாம் ஆனால் நிலம் அந்த கோவிலுக்கு உரியது என்பது மட்டும் உண்மை. அந்த கைங்கர்யம் தொடர்ந்து நடந்திருந்தால் கோவில் அதை கேட்டிருக்காது, அந்தக் கைங்கர்யம் தடை ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடுகள் கோவில் செய்யவேண்டும் அல்லவா அதற்கு கோவில் நிலம் தேவைப் பட்டிருக்கும் அதனால் அது உரிமை கேட்டு உள்ளது. இதுபோல நிறைய நபர்கள் கோவில் சொத்துக்களை தவறாக பயன் படுத்தி உள்ளனர். மதுரையில் கூட கோவிலுக்கு நந்தவனம் வைத்து தினசரி பூஜைகளுகு பூக்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்த இருந்தது ஆனால் காம்ரெட் ஒருவர் அந்த குடும்பத்திற்கு பண ஆசை காட்டி இப்போ இந்த இடம் அதிக விலைக்கு விற்கலாம் என்று கூறி கோவிலுக்கு அந்தப்பணத்தை வைத்து பூக்கள் வழங்க ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று பிளாட் போட்டு விற்பனை செய்துவிட்டார் இப்போ அதில் அனைத்து வசதிகளும் மதுரை மாநகராட்சியும் செய்து கொடுத்து விட்டது அதில் கிட்டத்தட்ட 150 வீடுகளுக்கு மேல் உள்ளன அனைத்தும் இரண்டுமாடி, மூன்று மாடிக் கட்டிடங்கள் ஆகிவிட்டன இப்போது அவ்விடத்தில் 300 க்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆனால் அதற்கு பட்டா மட்டும் அவர்களால் மாற்றம் செய்யமுடியவில்லை இது நடந்து எனக்குத் தெரிந்து 40 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. இப்போ கோவிலின் பூஜைக்குப் பூக்கள் போகும்வரை அந்தக் கோவிலின் நிர்வாகம் இதைக் கண்டு கொள்ளாது என்று அது தடை படுகிறதோ அப்போது கோவில் அந்த இடத்தை கைப்பற்ற முயற்சிக்கும் இதுதான் நடைமுறை. அனுபவிக்கும் வரை அனுபவிக்கலாம் சொந்தக்காரன் வரும் போது கொடுத்துத்தான் தீரணும்.


Bhaskaran
மே 15, 2025 20:35

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நகரமே அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தம் என்று மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக நடக்கிறது காலம்காலமாக பரம்பரை பரம்பரையாக வீடுகளுக்கு வரிகட்டி வரும் குடும்பங்கள் ஒரு அவசர செலவுக்காக விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . அரசியல் வாதிகளும் இதை கண்டு கொள்ளவில்லை பாதிப்பு மக்களுக்கு அந்த ஈஸ்வரன் மட்டுமே நல்ல முடிவு காட்டவேண்டும்.


Natarajan Ramanathan
மே 15, 2025 20:29

ஜனாதிபதிக்கு, மூன்று மாதத்துக்குள் மசோதாக்களை தீர்வுகாண அறிவுரை சொன்ன உச்சா நீதிமன்றம் இந்த வக்பு பிரச்சனைக்கும் மூன்று மாதங்களுக்குள் தீர்வு சொல்ல வேண்டும்.


sasikumaren
மே 15, 2025 20:00

ஒரு பக்கம் வக்பூ இன்னோரு பக்கம் நமது நாட்டின் முதல் எதிரியின் பெயரில் பக்கிஸ் தீவிரவாத நாட்டின் பெயர் கொண்ட நகரத்தின் ஒரு பெரிய பகுதி கடைசி வரை இந்துக்களுக்கு சொந்தமான இடம் இந்துஸ்தானில் கிடையாது சிவன் கோவில் மேல் தாஜ்மஹால் கட்டி வைத்து விட்டு ஆக்கிரமிப்பு செய்து விட்டான்கள் மத்திய அரசு ஆட்சி காலத்திலேயே இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்


KKeyan
மே 15, 2025 18:50

நமக்கு நேர்ந்த, நேர்ந்துகொண்டிருக்கின்ற, நேரப்போகின்ற துன்பங்களையெல்லாம் சரி செய்ய ஒரேஒரு ஜனநாயக உரிமை "ஓட்டு". மற்ற மதத்தினர் போல ஒற்றுமையாக அந்த அரிய வாய்ப்பை வரும் தேர்தல்களில் தவறாமல் நல்லவர்களுக்கு பதிவு செய்வோம். அவர்கள் வெல்லட்டும் நன்மை செய்யட்டும்.


Pandi Muni
மே 15, 2025 18:35

இந்துக்களின் சொத்துக்களை கொள்ளயடிக்க வஃபு வாரியம். இந்து கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க இந்து அறநிலையத்துறை. இரண்டுமே அழித்தோழிக்கப்பட வேண்டியவை.


rama adhavan
மே 15, 2025 11:28

என்ன இது அநியாயம். கி பி 700இல் துவங்கிய மதத்திற்கு, இந்தியாவில் கி பி 12ம் நூற்றாண்டில் காலடி வைத்த மதத்திற்கு எப்படி நம் மாநில கிராமங்கள் சொந்தம் ஆயின? அப்போ இந்தியா, சீனா, அமெரிக்கா, ஏன் மொத்த உலகமும் சொந்தம் என ஓரு காலத்தில் சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.


ஆரூர் ரங்
மே 15, 2025 11:26

நிலாவில் கூட பல இடங்கள் அவர்களுக்கு சொந்தமா இருக்கும். மூலப் பத்திரம்தான் தேவையில்லையே.


Bala
மே 15, 2025 11:17

எங்க இந்த வீர வசனம் பேசும் சீமான் போன்றவர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போய் நிற்பதாக கூறும் சீமான் போன்றவர்கள் திருச்செந்தூரை ஊருக்கு சென்று அந்த கிராம மக்களுக்காக ஏன் போராடவில்லை? அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என்பதாலா? எங்கே அந்த சாட்டை துரைமுருகன்? எல்லாவற்றுக்கும் வீடியோ போடும் இவர் இந்த திருச்செந்தூரை மக்களுக்கான நியாயத்தை ஏன் ஒரு பேசவில்லை பேசவில்லை? எல்லாம் சிறுபான்மை கூட்டத்திடம் ஒட்டுப்பிச்சை எடுப்பவர்கள். அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை