உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓராண்டில் இந்தியாவில் நாய் கடிக்கு ... 20,000 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவல்

ஓராண்டில் இந்தியாவில் நாய் கடிக்கு ... 20,000 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நம் நாட்டில் ஆண்டுதோறும், 20,000 பேர் நாய் கடியால் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது; இது, உலகளவில் நாய் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில், 35 சதவீதமாகும்.

நம் நாட்டின் பல்வேறு நகரங்களில், தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகிறது. தெருவில் சுற்றித் திரியும் இந்த நாய்கள் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகும் போது, எதிரில் தென்படுபவர்களை கடித்து குதறுகின்றன. உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 'உலகம் முழுதும் ஆண்டுக்கு, 59,000 பேர் நாய் கடியால் இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு, 20,000 பேர் இறக்கின்றனர்' என, தெரிவித்துள்ளது. இது, உலகளவில் நாய் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில், 35 சதவீதம். இதற்கிடையில், நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நம்நாட்டில், 2021ல் இருந்து படிப்படியாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகமும் தெரிவித்து உள்ளது. கடந்த 2021ல் 17 லட்சம் பேர் நாய் கடிக்கு ஆளானதாகவும், 2022ல் இந்த எண்ணிக்கை 21.80 லட்சம், 2023ல் 30 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023ல் நாய் கடியால் பாதிக்கப்பட்டோர், 80 சதவீதம் அதிகம். இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:கடந்த 2023ல் நம் நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 350 பேர் நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் பேர் நாய் கடிக்கு ஆளாகி உள்ளனர். அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில், 250 மற்றும் 195 ஆக இருந்தது. தமிழகத்தில், 2023ல் 4.04 லட்சம் பேரை நாய் கடித்துள்ளது. இது, நாட்டின் மொத்த நாய் கடி பாதிப்பில், 13 சதவீதம். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் கர்நாடகா உள்ளது. அங்கு கடந்த ஆண்டில் இரண்டு லட்சம் பேரை நாய் கடித்துள்ளது.நாய் கடியால் ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்க, கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 24.53 லட்சம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. நாய் கடித்தால் மனிதர்களுக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், மத்திய அரசு, தேசிய ரேபிஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மனிதர்களுக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி ஒன்றின் விலை 250 ரூபாய். இதை, அரசு மருத்துவமனைகள் இலவசமாக மக்களுக்கு போட, சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு நிதி வழங்குகிறது. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் வாயிலாகவே, நாய் கடியில் இருந்து மக்களை காக்க முடியும் என்பதால், விலங்குகள் கருத்தடை சட்டம் 2023ஐ மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்படியே, நாய்களுக்கான கருத்தடை திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

gvr
செப் 22, 2024 20:37

Useless Supreme court objected to killing of stray dogs.


அப்பாவி
செப் 22, 2024 20:00

நாட்டைக் கெடுக்க நினைக்கும் சில காங்கிரஸ் தலிவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று இதுமாதிரியான பொய்யான தகவல்களைக் கொடுக்கின்றனர்.


கனோஜ் ஆங்ரே
செப் 22, 2024 12:04

ஏன்யா.... மனுஷ உயிர் பெருசா, நாய் உயிர் பெருசா...? கேட்டா, உயிர் வதை கூடாது..ன்னு சொல்வானுங்க... ஆனா, தன்னை கொசு கடிச்சா அதை அடிச்சு கொல்லுவானுங்க...? இதுலயும் இந்த பீட்டா...ன்னும் நாய்..நல வாரியம்..னும் இருக்குற அமைப்புல... வேலைவெட்டி இல்லாத அப்பஆத்தா சம்பாரிச்சு வச்சிட்டு, செலவழிக்க முடியாம... தின்னுட்டு செரிக்க முடியாம இருக்குற பெரிய பெரிய கோடீஸ்வரனுங்க மெம்பராம்... அவனுங்க நாய கொல்லக்கூடாது..ன்னு கொடி புடிக்குறானுங்க.. ரோட்ல, தெருவுல நடந்தும், டூ வீலர்..ல போகுற ஏழை, நடுத்தர மக்களுக்குத்தானே அந்த வலி தெரியும்... தின்னுட்டு தின்னுட்டு உடம்பு பெருத்துட்டு... அதை குறைக்க வாக்கிங்க போறவன்ங்களுக்கு இந்த தெருநாய் தொல்ல எங்கே தெரியப்போகுது... ஓராண்டில் 20 ஆயிரம் பேர் இல்ல.. இன்னும் இருபது லட்சம் பேர் சாவானுங்க, தெரு நாய ஆதரிக்குற அரசை பார்த்து சொல்றேன்..


SUBBU,MADURAI
செப் 22, 2024 15:44

இதற்கெல்லாம் மூல காரணம் விலங்குகள் நலப் போராளியும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு அப்போது மத்திய அமைச்சராக இருந்த மேனகாகாந்தியேதான் அவர்தான் CPCSEA என்ற அமைப்பின் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்து தன்னை விலங்குகள் உரிமைக்காக போராடும் போராளியாக காட்டிக் கொண்டார் அதன் விளைவுதான் இத்தனை மனித மரணங்களுக்கும் காரணம்!


R.PERUMALRAJA
செப் 22, 2024 12:02

பவுர்ணமியை நோக்கி சந்திரன் நகரும் பொழுது , நாத்திகம் பேசும் சிலதுகள் " துணை " கொண்டுவாருங்கள் , " துணை " ஆக்குங்கள் என்று சில மாதங்களாக குறைத்துக்கொண்டு இருக்கின்றன , இவைகளின் கடிகளையும் சேர்ப்பது சிறந்தது


venkatan
செப் 22, 2024 11:33

வெறும் பொழுதுபோக்கிற்கும் கவுரவத்துக்கும் நாய்களை கட்டிப்போட்டு வளர்ப்பது,வெறுமனே தெருநாய்களை உணவு மட்டும் கொடுத்து தொல்லைப்பட வைப்பது அவ்வகையான உயிரினங்களை கொடுமைப்படுத்துவதற்கு சமம்.சுற்றி இருப்போருக்கும் பயம்.


mei
செப் 22, 2024 09:45

அரசியல்வாதி கிட்ட போகாதே னு சொன்னா சனங்க கேக்குறாங்களா?


Velan Iyengaar
செப் 22, 2024 08:11

இந்த செய்திக்கு பதில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பாலியல் பேச்சுக்கு மத விரோத பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட செய்தியை தலைப்பு செய்தியா போட்டிருக்கலாம் ....


ராஜா
செப் 22, 2024 08:10

நாயை பழைய முறையில் கொல்ல வேண்டும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஐ நாய் கடித்து அனுபவம் கொடுக்க வேண்டும்


கனோஜ் ஆங்ரே
செப் 22, 2024 11:59

நீங்க சொன்ன இந்த உண்மைய... எந்த “...”ங்க கேக்குது...? தின்ன சோறு செரிக்காதவங்க, இதுக்கு ஒரு விலங்குநல வாரியம்...னு பேர வச்சிட்டு... நாய கொல்லக்கூடாதுன்னு சொல்றானுங்க... அவனுங்க பொண்டாண்டி, புள்ளக்குட்டி நாய் கடிச்சு இறந்தா தெரியும்... அந்த வலி...?


Kasimani Baskaran
செப் 22, 2024 07:14

இதைப்போல பல மடங்கு தமிழர்கள் கள்ளச்சாராயம் மற்றும் அரசு விநியோகிக்கும் தரமற்ற மதுவால் சாய்கிறார்கள், பல குடும்பங்கள் அழிகின்றன. அது போன்ற பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். தெரு நாய்களுக்கு குக செய்து விடுவது எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும். நாய்க்குட்டிகளை பொறுப்பில்லாமல் தெருவில் வீசுபவர்களுக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை கொடுக்கலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 22, 2024 06:58

டாஸ்மாக்கினால் உயிரிழந்தவர்களை விட இந்த எண்ணிக்கை அதிகமா ???? குறைவா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை