உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் வளாகத்திலும் நாய் தொல்லை: நீதிபதிகள் புது உத்தரவு

சுப்ரீம் கோர்ட் வளாகத்திலும் நாய் தொல்லை: நீதிபதிகள் புது உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'உணவுக்காக நாய்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க, மிச்சமான உணவுகளை மூடிய குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும்' என, அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நடவடிக்கை நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக, நாடு முழுதும் முதியோர்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரேபிஸ் நோய் தாக்கியும் பலர் உயிரிழந்துள்ளனர். உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் தெருநாய்கள் சுற்றித் திரிவதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். உணவுக்காக நாய்கள் நுழைவதை தடுக்க, உடனடியாக அமல்படுத்தும்படி மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதன்படி, உயர் நீதிமன்ற வளாகம் முழுதும் மூடிய குப்பைத் தொட்டிகளை வைத்து, அதில் மட்டுமே மிச்சமான உணவுகளை கொட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் திறந்தவெளியிலோ, மூடப்படாத குப்பைத் தொட்டிகளிலோ உணவை கொட்டக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகுல் கண்டனம்! டில்லியில் அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வாயில்லா ஜீவன்கள் மீதான இந்த நடவடிக்கை கொடூரமானது, இரக்கமற்ற து. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மனிதாபிமான, அறிவியல்பூர்வமாக பின்பற்றப்பட்டு வந்த பல ஆண்டு கொள்கையிலிருந்து பின்வாங்குவதாகும். தெருநாய்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல. தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு போன்றவற்றால், நாய்களை கொடுமைப்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் கண்டனம்!

டில்லியில் அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வாயில்லா ஜீவன்கள் மீதான இந்த நடவடிக்கை கொடூரமானது, இரக்கமற்றது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மனிதாபிமான, அறிவியல்பூர்வமாக பின்பற்றப்பட்டு வந்த பல ஆண்டு கொள்கையிலிருந்து பின்வாங்குவதாகும். தெருநாய்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல. தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு போன்றவற்றால், நாய்களை கொடுமைப்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். பொதுமக்களோடு, விலங்குகளின் நலனையும் பாதுகாப்பதை நாம் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஆக 13, 2025 10:44

அப்படியே கொஞ்சம் பாராளுமன்றம் பக்கமாகவும் அவற்றை அனுப்பி விட்டால் விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு விடும்!


SP
ஆக 13, 2025 08:47

எது மக்களுக்கு நல்லதோ அதை எதிர்ப்பது இந்த முட்டாளின் வேலை


Padmasridharan
ஆக 13, 2025 07:21

மீந்து போன சாப்பாட்டை குப்பைத் தொட்டியிலாவது போடுவோமே தவிர பிறருக்கு உணவாக அளிக்கமாட்டோம். இதுதான் இவர்களின் சட்டம். PETA என்ன செய்துக் கொண்டிருக்கின்றது, இதில் இறங்குமா


N.Purushothaman
ஆக 13, 2025 06:43

நாய்களை திரட்டி உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக ராவுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி டெல்லியில் போராடும் ... ஆங் ....


Kasimani Baskaran
ஆக 13, 2025 06:41

எல்லா தெரு நாய்களையும் பிடித்து குக செய்து விடுவது நல்லது. காப்பகம் அமைத்தாலும் நல்லது.


Karthikeyan
ஆக 13, 2025 06:33

ராகுல் மீதான மரியாதையை இந்தமாதிரியான அறிக்கை காரணமாக கெடுத்துக்கொள்கிறார் நாய்களை இவர் மாதிரி கல்யாணமே பண்ணிக்காமல் இருக்கச் சொல்லட்டும்


சிவா. தொதநாடு.
ஆக 13, 2025 06:20

தெருவில் திரியும் நாய்களுக்கும் வீட்டில் வளர்க்கும் உங்களுக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியாது .


Veera
ஆக 13, 2025 04:22

When people die of Rabies, Soniya Gandhi family will pay Rs 1 Crore compensation to each victim's family.


Srivilliputtur S Ramesh
ஆக 13, 2025 03:50

கொஞ்சமாவது யோசனை இருக்கா ? நாய்களின் பிரச்சனை இந்த நாட்டின் காத்திரமான பிரச்சனை. எல்லா ஊர்களிலும் வீதிகளில் பெண்களும், குழந்தைகளும் நடமாட முடியாத படி, வீதிகளில் நாய்கள் திரிந்து கொண்டிருக்கின்றன. நாடெங்கும் நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு பெருகிக்கொண்டே போகிறது. இறுதியில், மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட நாய்களின் எண்ணிக்கை பெருகி, இது "பாரத தேசம்" என்பதற்குப்பதிலாக, "நாய் தேசம்" என்றாகி விடக்கூடும். இதனால் தான், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் சாட்டையை எடுத்திருக்கிறது. நீங்கள் எப்போதாவது நாய்களிடம் கடிபட்டிருக்கிரீர்களா? ஒரு வேளை, நீங்கள் நாய்களிடம் கடிபட்டால், என்ன செய்வீர்கள் ? தெரு நாய்களிடம் கடிபட்டு, உங்கள் வீட்டில் உள்ள உங்கள் உறவினர்கள் யாராவது, ஆஸ்பத்திரியில் இறந்து போனால், நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருவருடைய கஷ்டத்தை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.... இது தேசத்தையே உலுக்கும் பிரச்சனை.. நாய்க்கடிக்கான, மருந்துகளின் விலை உங்களுக்குத் தெரியுமா ?


சமீபத்திய செய்தி