மருத்துவமனை வளாகத்தில் நாய்கள், மாடுகள் நுழைய தடை
பெங்களூரு: சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:அரசு மருத்துவமனைகளின் உள்ளேயும், வளாகத்திலும் நுழையும் தெரு நாய்கள், மாடுகளால் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள், கர்ப்பிணியர், தாய், சேய்களுக்கு பாதிப்பு ஏற்படும் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனைகள் மிகவும் முக்கியமான இடமாகும்.மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகள், மீதமான உணவு பொருட்களை முறையாக அகற்றுவது இல்லை. இதுவே தெரு நாய்கள் மருத்துவமனைகளின் வளாகங்களில் நுழைய முக்கிய காரணம். மருத்துவமனைகளின் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதை, சுகாதாரத்துறை கவனித்துள்ளது.மாடுகள், தெரு நாய்கள் மருத்துவமனைகள் வளாகத்தில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, இன்னும் ஒரு வாரத்துக்குள் சுகாதாரத்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.