உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமர்சனம் கூடாது… கருணாஸ் வரிசையில்… கண்டுக்காம விடுங்க… விஜய் பேச்சுக்கு ரியாக்சன்ஸ் இதோ!

விமர்சனம் கூடாது… கருணாஸ் வரிசையில்… கண்டுக்காம விடுங்க… விஜய் பேச்சுக்கு ரியாக்சன்ஸ் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கு அரசியல் கட்சியினர் மத்தியில் இருந்து ரியாக்சன்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில மட்டும் இங்கே!* தமிழக வெற்றிக்கழகத்தால் அ.தி.மு.க.,வுக்கு எள்முனையளவும் பாதிப்பு இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து.* விஜய் கட்சியின் பின்னணியில் பா.ஜ., இருக்கிறது. கமல், சரத்குமார், பாக்யராஜ், கருணாஸ் வரிசையில் கட்சி துவக்கியுள்ளார். வாழ்த்துக்கள் - சபாநாயகர் அப்பாவு* புதிய கட்சி தொடங்கியுள்ள விஜயை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். மற்றதை கட்சி பார்த்துக் கொள்ளும் - ரகசிய விவாதத்தில் கட்சியினருக்கு முதல்வர் உத்தரவு* நேற்று பிறந்த புதிய குழந்தை விஜய் கட்சி எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். அதிகம் விமர்சனம் செய்யக்கூடாது - கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுரை* விஜய் A டீமும் இல்லை, B டீமும் இல்லை; பா.ஜ.,வின் C டீம்: த.வெ.க., மாநாடு, பிரம்மாண்ட சினிமா மாநாடு. அ.தி.மு.க., தொண்டர்களை ஈர்க்கவே அக்கட்சி குறித்து பேசாமல் தி.மு.க., குறித்து விஜய் பேசியுள்ளார். எங்கள் கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது. தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பதால் கவர்னரைப் பற்றி பேசியுள்ளார்: சட்டத்துறை அமைச்சர், ரகுபதி.* 'ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்ற வகையில் த.வெ.க., கட்சி தலைவரும், நடிகருமான விஜய்யின் கற்பனை அதீதமாக உள்ளது,: வி.சி.க., திருமாவளவன்* திராவிடமும், தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னால், அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது. அவரின் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்து போகவில்லை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், சீமான்.

நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

sundarsvpr
நவ 05, 2024 17:44

கட்சி ஆரம்பிக்கும் முன் தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தை செலவு செய்யவேண்டும். எம் ஜி ஆர் சமுதாயத்திற்கு செலவு செய்தார் அரசியலுக்கு வரும் முன். ஆனால் கணேசன் ரஜினி கமல் போன்றோர் கட்சிக்கு சொந்தப்பணத்தை ஒரு தம்படி செலவு செய்யவில்லை. விஜய் ஜோசப் இதில் விலக்கு விஜய் பேச்சில் அரசியல்தனம் தலைதூக்காது.


sp.saravanan
அக் 30, 2024 23:39

யாருக்கு வேண்டுமானாலும் கட்சி துவங்க உரிமையுள்ளது இதற்கு ஏன் இந்த திராவிட இயக்கங்கள் இவ்வளவு பதற வேண்டும்


Raja
அக் 30, 2024 16:50

போங்க சார். 2ஜி 3ஜி னு மேடைக்கு மேடை கூவி மூணாவது தடவையா ஆட்சிக்கு வந்த பாஜகவே ஒன்னும் செய்யல.


Paramasivam
அக் 30, 2024 21:55

கரெக்ட், திருடர்கள் முக கொள்ளைக் குண்டர்களை பிடித்து திகாரில் போடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது


ramasamy p
அக் 30, 2024 12:42

அதாவது ஒரு மாநாட்டுக்கு இப்ப ஆளும் கட்சி அதனுடைய கூட்டணி கட்சிகள் ஏன் இவ்வளவு பயம் கலந்த ஒரு பதற்றம்.... இதல்லாம் தேவை இல்லாதது...


Tetra
அக் 30, 2024 12:33

ஐயா இவரு அவரை தாக்குவாரு. அவரு இவரை தாக்குவாரு. ஒண்ணும் ஆவாது. மொத்தத்தில ரெண்டு பேரும் மாத்தி மாத்தி நம்மள தாக்குவாங்க. அதான் கழகங்கள் கோட்பாடு


muthu
அக் 30, 2024 12:18

Actor vijay instead of blaming others , he can do his best to do service with his money deposit interest amount too. He didnot provide water food facity for his gathering which is against our tamil culture and Why he has to call this gathering . Whaterver he wants to speak he can do it by press release. Many poor workers lost their job due to non attending duty . Not keeping Anna , MGR , pon muthu ramalingam pictures at the stage and keeping kamaraj picture shows he is partial to his e vote banks


uCHANDRAMOHAN CHANDRAMOHAN
அக் 30, 2024 11:30

அவர் மேல் அத்தனை பயம் இருக்கவில்லையென்றால் பிறகெதற்க்கு இத்தனை கூப்பாடு....மக்களாகிய எங்களுக்கு நெரியும் யாரை எங்கே வைக்கவேண்டும் என்று....


Kasimani Baskaran
அக் 30, 2024 05:17

அவர்கள் தானே நிதி உதவி, தார்மீக உதவி செய்து புதிதாக கட்சி ஆரம்பிக்க வேலை ஒப்படைத்தார்கள். அவர்களே எப்படி விமர்சிக்க முடியும். கடைசியில் விஜயை சவுக்கு சங்கர் போல ஆக்காமல் இருந்தால் நல்லது. எதற்கும் விஜய் இவர்களிடம் கவனமாகவே நடந்து கொள்ள வேண்டும்.


Mariappan
அக் 30, 2024 00:24

விஜய் பேசியது சரி இனிமேல் தான் தெரியும் ஜாதி கட்சிகளின் வாக்கு ஜாதி கட்சிகளின் எப்போதும் ஜாதிகளூக்காகா அல்லா சுயநலவாதிகள் காசுக்காகா என்று மக்களுக்கு இனி மக்களேக்கு கண்டிப்பாகத்தெரியும்


Anantharaman Srinivasan
அக் 29, 2024 19:12

விஜய் கட்சி நடத்த Background ல் பணம் செலவு செய்வது யார் ??என்பது மில்லியன் டாலர் கேள்வி. சினிமாவில் சம்பாதித்த பணத்தை கரைத்து கட்சி நடத்த விஜய் முட்டாளல்ல...


புதிய வீடியோ