உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலை தேடி செல்ல வேண்டாம்!

வேலை தேடி செல்ல வேண்டாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஹார் சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடக்கிறது. தே.ஜ., கூட்டணியும், இண்டி கூட்டணியும் மோதும் தேர்தலில், பிரபல வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான 'ஜன் சுராஜ்' கட்சியும் களமிறங்கி உள்ளது. தன் கட்சிக்கு ஓட்டளிக்குமாறு, பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், அதிரடியாக கூறியிருப்பதாவது: பீஹார் தேர்தலில், நியாயமாக எங்களுத்தான் மக்கள் ஓட்டளிக்க வேண்டும். ஏனென்றால், பீஹாரை ஏற்கனவே ஆண்ட கட்சிகள், மாநில வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. தங்களை வளப்படுத்திக் கொள்ளும் விஷயங்களை மட்டுமே செய்துள்ளன.எங்களுக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைத்தால், 'சத் பூஜை' உள்ளிட்ட பண்டிகை களின் போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வர வேண்டும் என்ற கஷ்டம், பீஹார் மக்களுக்கு இருக்காது. ஏனென்றால், பீஹாரிலேயே அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி விடுவோம். பீஹாரிகள் யாரும், தமிழகம் உள்ளிட்ட வேறு மாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்ல வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

என்றும் இந்தியன்
அக் 27, 2025 15:42

தன்னுடைய படிப்புக்கு / உழைப்புக்கு வேலை கிடைக்காத போது வேறு ஊருக்கு / மாநிலத்துக்கு / நாட்டுக்கு செல்லுவது ஒரு இயற்கையான செயல் தானே


Venugopal S
அக் 27, 2025 10:38

இவரும் முழுநேர அரசியல்வாதியாக ஆகிவிட்டார்!


KRISHNAN R
அக் 27, 2025 09:51

அடிச்ச விடுங்க


baala
அக் 27, 2025 09:13

இதெல்லாம் நடக்கிற வேலையா? எப்படி வேலை வாய்ப்பை இவரால் உருவாக்க முடியும் என்று சொன்னால் நல்லது.


K V Ramadoss
அக் 27, 2025 12:16

ஜெயிக்கமாட்டோம் என்று தெரிந்துதான் தைரியமாக சொல்கிறார், பிரசாந்த் கிஷோர்..


Columbus
அக் 27, 2025 09:00

Prashant Kishor is another Kejriwal. USA s such leaders by giving them Magsaysay awards and bring them into prominence politically and nationally. Wangchuk from Ladakh and Amartya Sen and Md Younus the Nobel laureates are others. Be wary of such thrust leaders.


Nathansamwi
அக் 27, 2025 08:31

இவரு ஒருத்தர் தான் பீஹாரிகளோட கஷ்டத்தை பற்றி பேசி இருக்கிறார் ....மற்ற 2 தேசிய கட்சிகளும் மாறி மாறி குறை சொல்லிட்டு இருக்காங்க... 1947 ல இருந்து பிஜேபி ,காங்கிரஸ், ர்ஜ்ட் யாரும் பீகார் கு ஒன்னும் பண்ணல ....


G Mahalingam
அக் 27, 2025 08:24

பீகார் மக்கள் இல்லை என்றால் தமிழக பொருளாதாரம் வீழ்ந்து விடும். கட்டட வேலையில் மட்டுமே 60 சதவீதம் பீகார் ஒரிசா காரர்கள் இருக்கிறார்கள். இப்போது திருட்டுதனமாக வருகிறார்ஙள். ஆள் பற்றாக்குறையால் பங்களாதேஷ் காரர்களை விசா மூலம் இறக்குமதி செய்ய வழி வகுக்கும். பிறகு இந்தியாவிலேயே செட்டில் ஆகி விடுவார்கள்.


bharathi
அக் 27, 2025 07:49

you already know what he has done for TN


அப்பாவி
அக் 27, 2025 06:58

சீகிரம் இவர் தேர்தலில் வெல்க வேண்டும். பையாக்கள் பிஹாருக்கு திரும்பி சந்தோசமா வாழ வேண்டும்.


முக்கிய வீடியோ