உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்.,வுடன் இணைந்து அழிந்து போகாதீர் : சரத்பவார், உத்தவ்வுக்கு மோடி அறிவுரை

காங்.,வுடன் இணைந்து அழிந்து போகாதீர் : சரத்பவார், உத்தவ்வுக்கு மோடி அறிவுரை

மும்பை: காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதிலாக சரத்பவாரும், உத்தவ் தாக்கரேயும், அஜித்பவார் , ஏக்நாத் ஷிண்டே வுடன் இணைந்து விடலாம் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.லோக்சபா தேர்தலையொட்டி மஹாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது, இந்து தர்மத்தை அழிக்க காங்கிரஸ் கட்சி சதி செய்து வருகிறது. ஜூன் 04 ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் சரத்பவாரும், உத்தவ் தாக்ரேயும் காங்கிரசுடன் இணைய முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதிலாக சரத்பவார் தன் சரத்சந்திரபவார் கட்சியை அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும், உத்தவ் தாக்கரே தனது கட்சியை ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியுடன் இணையலாம். இவ்வாறு மோடி அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

MADHAVAN
மே 11, 2024 10:46

கோவம் வந்திருச்சு, இனிமேலு ஒருமேலே ஒரு அடிவிழுந்தாலும் நடக்கிறதே வேற


venugopal s
மே 11, 2024 10:34

தோல்வி பயத்தில் ஏற்பட்ட விரக்தியில் இப்படி எல்லாம் பேசத் தோன்றும்!


S R George Fernandaz
மே 11, 2024 09:18

பிளான் - B


சுந்தரம் விஸ்வநாதன்
மே 11, 2024 09:17

அழிவது என்று தீர்மானித்தபின் காங்கிரஸுடன் சேர்ந்து அழிவதற்கும் பாஜகவுடன் சேர்ந்து அழிவதற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை எப்படியும் அழிவது நிச்சயம்


அரசு
மே 11, 2024 08:05

மூழ்கும் கப்பல் காங்கிரஸ் என்றால், மூழ்கப் போகும் கப்பல் யார்


cbonf
மே 11, 2024 07:48

சரத் பவார் கட்சியிலும் உத்தவ் கட்சியிலும் இன்னும் என்ன இருக்கு இரண்டு நபர்கள் கட்சியும் எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கப்போவது நிச்சயம்


Kasimani Baskaran
மே 11, 2024 07:25

கிட்டத்தட்ட சிவசேனா, என்சிபி ஆகிய இரண்டு கட்சிகளும் ஏற்கனவே பனாலாகிவிட்டது


முருகன்
மே 11, 2024 07:10

கூட்டணி வைத்தால் நல்லவர்கள் இல்லை என்றால் அழித்து போவார்கள் என்பது எவ்வளவு சுயநலம் எதிர்க்கட்சிகள் இருக்கவே கூடாது


J.V. Iyer
மே 11, 2024 04:10

சொன்னதை கேட்டால்தானே? மூழ்கும் கப்பல்தான் கான்-க்ராஸ் என்று குழந்தைக்கும் தெரியுமே


Mohan
மே 11, 2024 08:27

அஜித் பவார், ஆட்டோ ஷிண்டே உறவு தான் மூளும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ