உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு சம்பவத்தில் அரசியல் செய்யாதீங்க; கதறி அழுத படி கர்நாடக துணை முதல்வர் பேட்டி

பெங்களூரு சம்பவத்தில் அரசியல் செய்யாதீங்க; கதறி அழுத படி கர்நாடக துணை முதல்வர் பேட்டி

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த துயர சம்பவத்தில் யாரும் அரசியல் செய்ய கூடாது என நிருபர்கள் சந்திப்பில் கதறி அழுத படியே கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்தார்.பெங்களூருவில் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் கர்நாடக மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். யாருக்கும் இந்ந நிலைமை வரக் கூடாது. இறந்தவர்களை நினைத்து துக்கம் தாங்க முடியவல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது.நாங்கள் நிர்வாகம் குறித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவு கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கவில்லை. பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பதில் கூற விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்யட்டும். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. அவர்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

SP Mobile
ஜூன் 05, 2025 16:03

இந்த ஐபிஎல் நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் என்ன பெருமை சேர்க்கிறது? ஆர்சிபியில் பெரும்பாலான வீரர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் இல்லை. ஆர்.சி.பி.யை கர்நாடக அரசு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடத்துவதில்லை. பிறகு ஏன் கர்நாடக அரசு பொதுப் பணத்தை வீணடித்து கொண்டாட்டங்களுக்கு பணத்தை செலவிடுகிறது? ஐபிஎல் என்பது ஒரு பொழுதுபோக்கு விஷயம். அரசாங்கம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? இந்த துணை முதல்வர் விமான நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு மறைமுகமாக ஊக்குவிக்கிறது. சிஎஸ்கே, மும்பை மற்றும் பல அணிகள் ஐபிஎல்லை வென்றன, அவர்கள் ஒருபோதும் இப்படி கொண்டாடத் திட்டமிடவில்லை. காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களைத் திசைதிருப்ப எப்போதும் பொழுதுபோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. மக்கள் விழிப்புடன் இருந்து, எது முக்கியம், அவசியம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.


உ.பி
ஜூன் 05, 2025 15:45

சொதப்பிட்டு என்ன அழுகை? எங்க மாடல் தலைவர் இன்னேரம் 10 லக்ஷம் கொடுத்திருப்பாரு


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 05, 2025 21:32

பத்து லட்சம் மஸ்தான் கம்பெனிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் மட்டும்தான். இந்த மாதிரி கூட்ட நெரிசலுக்கெல்லாம் ஒண்ணோ ரெண்டோ அதுவும் அப்பாவோட பையன் வந்து போட்டோ புடிச்சு தருவார்


Gokul Krishnan
ஜூன் 05, 2025 15:23

இதை முதலில் ராகுல் மற்றும் சூர்ப்ப நகையிடம் சொல்லவும்


vijai hindu
ஜூன் 05, 2025 14:44

உங்களை அங்க போ சொன்னது


thanventh R
ஜூன் 05, 2025 14:03

Then you have take the responsibility for this and resign from the post .That will be good sign of the politics


SUBRAMANIAN P
ஜூன் 05, 2025 13:48

இந்த அழுகாச்சி நாடகம்லாம் வேண்டாம்.. தயவுசெய்து ராஜினாமா பண்ணிட்டு கர்நாடக மக்கள் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க.


SUBRAMANIAN P
ஜூன் 05, 2025 13:47

எங்க முதலமைச்சர்கிட்ட கேளுங்க.. அரசியல் செய்யாம அவியலா செய்வாங்கன்னு எதுகை மோனையா பதில் சொல்லுவாரு..