உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; ஷிண்டே எச்சரிக்கையால் மஹா., அரசியலில் பரபரப்பு

என்னை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; ஷிண்டே எச்சரிக்கையால் மஹா., அரசியலில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அழைப்பு விடுத்த, கூட்டங்களை தவிர்த்து வரும் ஏக்நாத் ஷிண்டே, '2022ம் ஆண்டில் என்னை எளிதாக எடுத்து கொண்டபோது ஆட்சியை கவிழ்த்தேன்' என தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தற்போது, ஷிண்டே முதல்வராக இருந்தபோது ஒப்புதல் அளிக்கப்பட்ட, ரூ.900 கோடி மதிப்பிலான திட்டத்தை முதல்வர் பட்னவிஸ் நிறுத்தி வைத்துள்ளார். முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அழைப்பு விடுத்த, கூட்டங்களை, ஏக்நாத் ஷிண்டே தவிர்த்து வருகிறார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே பிரச்னை நிலவுவதாக தகவல் வெளியாகி வருகிறது.இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில், ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: நான் ஒரு சாதாரண கட்சித் தொண்டன். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022ல் என்னை எளிதாக எடுத்துக் கொண்டபோது நான் ஆட்சியை கவிழ்த்தேன்', என்றார். 2022ம் ஆண்டில், 40 எம்எல்ஏக்களுடன் ஷிண்டே பா.ஜ.,வுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்து முதல்வர் ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 22, 2025 15:19

யாருடனும் யாரும் கை / கால் கோர்க்கலாம் என்னும் அசிங்க அரசியல் அரங்கேறி வருகிறது ........


எவர்கிங்
பிப் 22, 2025 14:05

ஷிண்டே ஒரு சண்டி மாடு


S.Martin Manoj
பிப் 22, 2025 13:41

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான்


kannan
பிப் 22, 2025 13:11

ஷிண்டே கட்சியில் இருந்து இன்னொரு ஷிண்டேயை பாஜக உருவாக்கும். அதனால்தான் மானமுள்ளவர்கள் பாஜகவை ஆதரிப்பதில்லை.


Rajasekar Jayaraman
பிப் 22, 2025 11:32

ஐயோ பாவம் பாக்குற எதுக்கு ஒரு சண்டே என்றால் சிந்தேவுக்கு ஒரு தாக்கரே இருப்பான் போடா.


Rajasekar Jayaraman
பிப் 22, 2025 11:29

ஷிண்டே எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேறலாம் உன்னை நம்பி பாஜக இல்லை.


கல்யாணராமன்
பிப் 22, 2025 11:13

ஏ... என் பேரு சூசை, நான் திங்கறது தோசை, உனக்கு வைக்கப்போறேன் பூசை


கல்யாணராமன்
பிப் 22, 2025 11:10

உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. பாஜகவில் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். முன்பு இருந்த நினைப்பில் மிதப்பில் இருக்க வேண்டாம்.


ஆரூர் ரங்
பிப் 22, 2025 10:06

பவார் பால் மாறுவது தன்னை பாதிக்கும் ன்னு புரிஞ்சு பிளாக் மெயில் பண்ணுறார். கனவு பலிக்காது ஷிண்டே.


T.sthivinayagam
பிப் 22, 2025 10:04

கட்சி இரண்டு பட்டால் பாஜவுக்கு கொண்டாட்டம் தானே என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை