உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் அதிகாலை நடைபயிற்சி வேண்டாம்: சந்திரசூட் அறிவுரை

டில்லியில் அதிகாலை நடைபயிற்சி வேண்டாம்: சந்திரசூட் அறிவுரை

புதுடில்லி: காற்று மாசுபாட்டால் டில்லி ஸ்தம்பித்து விட்டதால், இனி அதிகாலை நடைபயிற்சியை மக்கள் தவிர்ப்பது நல்லது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.தலைநகர் டில்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாட்டில் தலைநகரே ஸ்தம்பித்து கிடக்கிறது.இந்த காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக, அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல் உமிகளை விவசாயிகள் எரிப்பது தான். எனவே, இதனை தடுக்க பெயரளவு நடவடிக்கைகளை மட்டுமே இரு மாநில அரசுகளும் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மரக்கட்டைகளை எரிப்பவர்களுக்கும், அதை மீறுபவர்களுக்கும் ஏன் பெயரளவு அபராதம் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மாசுபாட்டை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் அரசுகளின் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது, டில்லியில் தினமும் அதிகாலை 4 மணி முதல் 4:15 மணிவரை நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். இன்று முதல் நிறுத்தி விட்டேன். காரணம் நகரில் காற்று மாசு அதிகரித்துவிட்டதால் சுவாசப்பிரச்னை ஏற்படும் என டாக்டர்கள் எனக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.எனவே இனி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்ப்பதே நல்லது. அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Chandrasekaran Balasubramaniam
அக் 25, 2024 09:51

ஏப்பா அவர் அவரது கடவுளை நம்பிக்கை வைத்து வழிபடுகிறார், நீ உன் கடவுளை வைத்து வழிபாடுகிறாய் இதற்கும் நீதி வழங்குவதற்கும் என்ன சம்பந்தம். இதில் மத கோட்பாடுகளை புகுத்த கூடாது. ஏன் அரசியல் தலைவர்கள் குல்லா அணிந்து நோன்பு கஞ்சி அருந்துவதில்லையா. அப்பம் சாப்பிடுவது இல்லையா சர்ச்சுகளில்.


veeramani
அக் 25, 2024 09:37

இந்திய தாலைநகரம் புதுதில்லி... டீசல் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் மற்றும் பாரிதாபாடில் இயங்கும் தொழில்சாலைகளின் விசா வாயுக்களை கண்டிப்பாக நிறுத்தினால் தில்லி காற்றின் மாசுபடுவதை குறைக்குமுடியும் இத விட்டு விட்டு விவசாயிகளை குறை சொல்லாதீர்கள் ப்ளீஸ்


theruvasagan
அக் 25, 2024 08:37

அங்கெல்லாம் காலை நடைபெயற்சி போனால் ஆரோக்கியம்தான் கெடும். எங்கள் அமைதி பூங்காவில் மார்னிங் வாக் போனால் உசுருக்கு உத்திரவாதம் இல்லை.


Rpalnivelu
அக் 25, 2024 07:12

ஜட்ஜ் எப்ப டாக்டர் ஆனார்?


Abdullah Sulthan
அக் 25, 2024 06:06

தனிப்பட்ட சார்புகளை பிரதிபலிப்பதன் அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும். அவர் என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதற்கொண்டு ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே கடுமையாக சிதைத்துவிட்டார் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே குற்றம்சாட்டியுள்ளார். நீதிபதிகள் தங்கள் மத மற்றும் அரசியல் சார்புகளையும் அதுசார்ந்த செயல்களையும் பொதுவெளியில் பிரதிபலிப்பதன் மூலம் அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும். அப்படியிருக்கும்போது சந்திரசூட் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசியல் தலைவராக இருக்கும் பிரதமர் மோடி கலந்துகொள்வது நீதித்துறையில் அரசின் தாக்கம் இருப்பதை புலப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அங்கு ராமர் கோவில் கட்டாலம் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் சந்திரசூட்டும் ஒருவர். இதைப்பற்றி சமீபத்தில் பேசிய சந்திரசூட் அந்த வழக்கு நடந்த சமயத்தில் சாமி சிலை முன் அமர்ந்து தனக்கு ஒரு வழி கூறும்படி பிரார்த்தித்தேன் எனவும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் வழிகாட்டுவார் எனவும் நிகழ்ச்சி ஒன்றில் பெருமையாக கூறிக்கொண்டார். மத ரீதியாக மிகவும் சர்ச்சைக்குரிய, எளிதில் ஒருவரை புண்படுத்திவிடக்கூடிய இதுபோன்ற விஷயங்களை சந்திரசூட் தெரிவிப்பது அவரது தனிப்பட்ட நமபிக்கை அவரது தீர்ப்பில் பிரதிபலித்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.


எஸ் எஸ்
அக் 25, 2024 10:36

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் பைபிள் பற்றி பேசினாரே அது ஓகே வா?


ஆரூர் ரங்
அக் 25, 2024 12:17

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பானுமதி பைபிள் வழிகாட்டுதலின்படி தீர்ப்பளித்தாரா? ஒய்வு பெறும் விழாவில்


Kasimani Baskaran
அக் 25, 2024 05:06

ஹரியானா மற்றும் பஞ்சாபில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றால் உருவாகும் புகை, மற்றும் வாகனங்களில் இருந்து வரும் புகை பனிக்காலங்களில் சிக்கலை உருவாக்குகிறது. இவற்றை ஸ்மோக் என்பார்கள்.


J.V. Iyer
அக் 25, 2024 04:30

இது வேண்டாதவேலை. இதற்கு நேரம் இருக்கு. ஆனா தேங்கி இருக்கும் கேஸ்களை முடிக்க நேரம் இல்லை. முதலில் வக்ப் போர்டு ஒழிக்க ஏதாவது செய்யுங்கள்.