உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாரி மீது டபுள் டெக்கர் பஸ் மோதி விபத்து; 5 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு

லாரி மீது டபுள் டெக்கர் பஸ் மோதி விபத்து; 5 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அலிகார்: உத்தரபிரதேசத்தில் டபுள் டெக்கர் பஸ், லாரி மீது மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேசம், அலிகார் அருகே உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் டில்லியில் இருந்து அஸாம்கரை நோக்கி, பயணிகளை ஏற்றிக் கொண்டு டபுள் டெக்கர் பஸ் சென்று கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில், 5 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்ஸின் இடிபாடுகளில் சிக்கினர். இதனை அறிந்த உள்ளூர் மக்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Krishnamurthy Venkatesan
நவ 21, 2024 12:10

வோல்வோ பஸ், டபுள் டெக்கர் பஸ், ஸ்லீப்பர் பஸ், டபுள் ஆக்ஸிஸ் பஸ் இவை அனைத்தும் மிக வேகமாக செல்கின்றன. 100 கிமீ டு 120 கிமீ . வேக கட்டுப்பாடு தேவை. அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 11:46

அடடா, விபத்து நடந்தது உத்தரபிரதேசத்திலா? அதான், அரசு பஸ் என்றும் போடவில்லை, திராவிட விடியல் என்றும் எழுத முடியவில்லை.


வாய்மையே வெல்லும்
நவ 21, 2024 13:54

வைகுண்டேஸ்வரனுக்கு பளபளக்கும் பல்லிளிக்கும் அறிவாலயநாம சகீர்த்தனம் புகழ் பாடும் நாதஸ்வரம் ஒன்று பார்சல் ..


ديفيد رافائيل
நவ 21, 2024 10:53

Double decker bus speed போகவே கூடாது, speed போனா மற்ற bus ஐ compare பண்றப்ப speed control பண்ண முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை