மேலும் செய்திகள்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்?
2 minutes ago
ஏ.ஐ.டி.யூ.சி., மாநில குழு கூட்டம்
31 minutes ago
புதுடில்லி: இரட்டை இலை தொடர்பாக இ.பி.எஸ். பதில் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க., பயன்படுத்தக்கூடாது என திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், தொடர்பாக, 2017 முதல் 2022 வரை தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் அளித்துள்ளேன். இது தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் சிவில் வழக்குகள் முடிவுக்கும் வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக் கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு அளித்த புகார் மனுவுக்கு, இதுவரை எவ்வித பதிலும் இல்லை.லோக்சபா தேர்தல் நெருங்குவதால், தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக்கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக இ.பி.எஸ்.,பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2 minutes ago
31 minutes ago