உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்டோ சாலையில் வடிகால் பணி தீவிரம்

மின்டோ சாலையில் வடிகால் பணி தீவிரம்

ராஜீவ் சவுக்:மின்டோ சாலை சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க பொதுப்பணித்துறை பெரிய அளவிலான வடிகால் பணிகளைத் துவக்கியுள்ளது.மழைக்காலத்திற்கு முன்பு நகரில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித் துறை ஆலோசித்து வந்தது. இதன் பின், நகரில் வெள்ளம் தேங்கும் பகுதிகள் பட்டியலிடப்பட்டன.முதற்கட்டமாக பட்டியலில் உள்ள 10 இடங்களில் முக்கியமான மின்டோ சாலை சுரங்கப்பாதை, மேற்கு டில்லி ஜாகிரா சுரங்கப்பாதை ஆகிய இரண்டு இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது.இந்த இரு சுரங்கப்பாதைகளிலும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிகப்படியான மழைநீரை வெளியேற்றும் வகையில், 1,000 மி.மீ., விட்டம் கொண்ட புதிய வடிகால் அமைப்பு நிறுவப்பட்டு வருகிறது.இது தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பா.ஜ.,வின் தேசிய தலைமையகம் வரை வடிகால் வசதி நீட்டிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை