உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பமேளாவில் புனித நீராடினார் திரவுபதி முர்மு

கும்பமேளாவில் புனித நீராடினார் திரவுபதி முர்மு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: மஹா கும்பமேளாவை முன்னிட்டு, திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடினார்.கடந்த மாதம் ஜன.,13ல் உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா துவங்கியது. இதுவரை 43 கோடி பேர் புனித நீராடி உள்ளனர். பிரதமர் மோடி கடந்த 5ம் தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் பிரபலங்களும் புனித நீராடி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=secnb486&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், புனித நீராடுவதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரயாக்ராஜ் நகர் வந்தார். அவரை கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, திரிவேணி சங்கமம் வந்த அவர், அங்கிருந்த பறவைகளுக்கு உணவு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
பிப் 10, 2025 14:44

கிறிஸ்தவராக இருந்தாலும் ..........


ManiK
பிப் 10, 2025 12:14

நம்ம சிஎம் கும்பமேளா போகமாட்டாரு... போனாலும் கண்டிப்பா தலைமுழுகவே மாட்டாரு. அதுக்கு வாரண்டில கவரேஜ் கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை