உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது இடத்துக்கு இப்படியா வருவது... பெங்களூருவில் ஆடை சர்ச்சை; பற்றி எரியும் சமூக வலைதளம்!

பொது இடத்துக்கு இப்படியா வருவது... பெங்களூருவில் ஆடை சர்ச்சை; பற்றி எரியும் சமூக வலைதளம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு; கர்நாடகாவில், ஷார்ட்ஸ் அணிந்து வந்த பெண்ணிடம், இதுபோன்ற ஆடைகளை பொது இடங்களில் அணியக் கூடாது என்று இன்னொரு பெண் வாக்குவாதம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

வைரல் வீடியோ

இன்ஸ்டாகிராமில் பிரபலமான யோகா பெண் பயிற்றுநர் டேனி பட்டாச்சார்ஜி, கடந்த 8ம் தேதி ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், சேலை அணிந்தருந்த பெண் ஒருவர் 'ஷார்ட்ஸ்' அணியக் கூடாது என்று டேனியிடம் கன்னட மொழியில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த வீடியோவில், 'பெங்களூரூவில் பொது இடங்களில் ஷார்ட்ஸ் அணிய அனுமதியில்லையா' என்று டேனி கேள்வி எழுப்புகிறார். மேலும், 'ஷார்ட்ஸ் அணிவதால் என்ன பிரச்னை என்றும், இங்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

விவாதம்

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், ஏராளமானோர் அந்தப் பெண்ணுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஷார்ட்ஸ் அணிவதால் சமூதாயத்தில் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்றும், மலிவான மக்களிடம் மலிவான மனநிலை இருப்பதாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர். மற்றொருவரோ, பெங்களூரு பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார் அதேவேளையில், யோகா பெண் பயிற்றுநர் டேனி பட்டாச்சார்ஜி அந்தப் பெண்ணை அவமதித்து விட்டதாகவும், அது ஒரு ரீல்ஸ்க்காக எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன.

விளக்கம்

இதற்கிடையில், இந்த அறிக்கைகளுக்கு பதிலளித்த பட்டாச்சார்ஜி, அந்தப் பெண்ணை நான் தவிர்த்து சென்றிருக்கலாம். ஆரம்பத்தில் இதனை கண்டுகொள்ளாமல் நான் பார்க்கிங்கிற்கு சென்றேன். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து என்னிடம் வாக்குவாதம் செய்தார். மற்ற கார்களை நிறுத்தி, எனது ஷார்ட்டை காட்டி பேசிக் கொண்டிருந்தார். இருந்தும், நான் அதனை கடந்து சென்றேன். ஆனால், அந்தப் பெண் விடாமல் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Antony Das
செப் 16, 2024 07:24

பொதுவாகவே வட மாநிலத்து மக்கள் குறிப்பாக பெண்களிடம் ட்ரெஸ்ஸிங் சென்சே இல்லை என்பது ஊரறிந்த உண்மை... பெங்களூரு பட்டனத்தை சூறை ஆடி இப்படி வெட்கம் இல்லாமல் சுற்றி திரிவது பெண்களே அதுவும் வட நாட்டு பெண்கள்.. இந்த பெண்களை போல சில பெண்களும் பொல்லொவ் பண்ணி தங்கள் ஆடை அலங்காரம் இவளவே என்று ஆந்திரா கர்நாடக கேரள தமிழ்நாடு பெண்களும் செய்வது தான் வருந்த கூடிய விஷயம்...


TamilArasan
செப் 17, 2024 16:54

பொதுவாக வட இந்திய மக்கள் என்று கூறுவதாக இருந்தால் - கிறித்துவ பெண்கள் என்று கூறுங்கள்... மேலும் இந்த பெயர் கிறித்துவ வங்காள பெயர் போன்று தெரிகிறது அது கிழக்கு இந்தியா... பொது இடங்களில் ஆபாசமாக ஆடை அணிவது ஆன் பெண் இரு பாலரும் தவிர்க்க வேண்டும்...


Tetra
செப் 15, 2024 12:44

ஒரு தப்புமில்லை. ஆண்கள் பார்க்கத்தானே இப்படி அணிகிறீர்கள். ஆனால் பிரிஜ் சாதனம் ? கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்புக்காகவே அடக்கமாக இருக்கச்சொல்கிறார்கள் . உங்கள் விருப்பம்.


Ganesh
செப் 15, 2024 11:37

உடை என்பது உடலை பாதுகாப்பாதற்க்காக.. அது அந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்காக வடிவமைக்கப்பட்டது... மேற்கத்திய நாடுகளில் சூரிய ஒளி உடல் பெறுவதற்க்காக உடை குறைவாக அணிவார்கள்.. ஆனால் அதே குளிர் காலங்களில் முழுவதுமாக உடலை மூடிகொள்வார்கள்...... "காண மயிலாட கண்டிருந்த வான்கோழி...." அந்த பாடல் தான் யாபகம் வருகின்றது....


Annamalai Al
செப் 15, 2024 09:01

ஒரு பெண்ணின் நடத்தையை வைத்தே, அவர்களின் அப்பா, அம்மா எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாகத்தெரிந்து கொள்ளலாம்…


S MURALIDARAN
செப் 15, 2024 07:08

பொது இடம் என்று வரும் போது சில கண்ணியத்தை பின்பற்றுவது அவசியமாகிறது. தனிமனித சுதந்திரம் ஒருவர் தனிமையில் இருக்கும்போது மட்டுமே. இந்திய கலாச்சாரத்தை மேற்கத்திய மக்களே நடைமுறைப் படுத்த ஆர்வம் காட்டும் போது இங்குள்ளவர்கள் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் சீரழிந்து வருகிறார்கள். இது வருங்கால சந்ததியினருக்கு நல்லதல்ல. பெற்றோர்களின் வளர்ப்பு முறை அரசியல் தலையீடு போன்றவை சமுதாய சீரழிவிற்க்கு காரணம்.


karthikeyan
செப் 14, 2024 23:17

உங்க ..... போட்டு கூட்டிட்டு போ...


Kuppan
செப் 14, 2024 17:44

அனைவரும் அந்த பெண்ணின் ஆடை சுதந்திரத்தை பற்றி மட்டும் பேசுகிறார்கள் அந்த பெண் பொது இடத்தில் கடை பிடிக்க வேண்டிய கண்ணியத்தை மறந்து விட்டார்கள்.


Vignesh V
செப் 14, 2024 14:58

ஆடை அணிவது அவர் அவர் உரிமை. ஒரு வட இந்தியா பெண் எதற்காக தென் இந்தியா கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்? உங்களுக்கெல்லாம் அறிவு இல்லையா? யோகா டீச்சர்ஐ சீண்டிய அந்த பெண்ணை ஹெக்க்ளிங் கேஸ் இல் சிறையில் அடைக்க வேண்டும். சுதந்திர நாட்டில் மற்றவர் சுதந்திரத்தை கெடுக்கும் வேலையை செய்பவர்களுக்கு முன்னுதாரணமாய் இந்த சம்பவம் அமைய கர்நாடக சிஎம் சித்த ராமையாவை கேட்டு கொள்கிறேன்.


Tetra
செப் 15, 2024 12:46

சிந்துவின் ஸிஷ்யனா?


Sivak
செப் 17, 2024 23:32

ஆம்பளை பெயரில் கருத்து போடும்....?


k.kirankumar
செப் 14, 2024 08:45

திஸ் ஐஸ் தி பிஜிகேஸ்ட் ப்ரோப்லேம் இந்த பெங்களூர் நோர்த் இந்தியன்ஸ் ஆர் ஸ்பாயிலிங் தி சவுத் இந்தியன் ட்ரடிஷன் அண்ட் குளத்தூர்.


Balaji
செப் 14, 2024 05:33

நீங்க ஏன் இவ்வளவு பெரிய டிரஸ் போட்டு இருக்கீங்க அதான் அந்தம்மா கடுப்பாய்ட்டாங்க கொஞ்சம் சின்ன டிரஸ்-a போடுங்க ப்ளீஸ்


Vignesh V
செப் 14, 2024 15:39

கடுப்பு ஆவதற்கு அந்த அம்மா யார்? மால் உரிமையாளரா? அது வெஸ்டர்ன் பேஷன். அமெரிக்கா, பிரிட்டன் நாடு பேஷன் வடிவமைப்பாளர்களால் உருவாக்க பட்டது. உங்களுக்கு உலக அறிவு இல்லையா?


முக்கிய வீடியோ