உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரைவர் பலி காங்., தலைவர் மகன் கைது

டிரைவர் பலி காங்., தலைவர் மகன் கைது

உடுப்பி : உடுப்பி காபு மிலிட்டரி காலனி பகுதியில் வசித்தவர் முகமது உசேன், 45; ஆட்டோ டிரைவர். கடந்த 13ம் தேதி காலை 5:00 மணிக்கு பைக்கில் வெளியே சென்றார். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முகமது உசேன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.விபத்து நடந்த இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, விபத்தை ஏற்படுத்தியது ஜீப் என்று தெரிந்தது.அந்த ஜீப்பை, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேவி பிரசாத் ஷெட்டி மகன் பிரஜ்வல், 25 ஓட்டியது தெரிந்தது. நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது; விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை