லாரி - மினி லாரி மோதல் டிரைவர் உடல் கருகி பலி
ஆக்ரா:லாரி - மினி லாரி மோதியதில் மினி லாரி தீப்பிடித்து அதன் டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார். இரண்டு வண்டிகளுமே தீயில் கருகின.உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா குவாலியர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் வந்த மினி லாரி மோதியது. உடனே, தீப்பற்றி இரு வண்டிகளுமே எரிந்தது.மினி லாரி டிரைவர் மோகர் சிங்,40, வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார். லாரி மற்றும் மினி லாரி இரண்டுமே தீயில் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தன.இந்த விபத்து காரணமாக, குவாலியர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.