உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து டிரைவர் பலி

விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து டிரைவர் பலி

புதுடில்லி:சாலைத் தடுப்பில் மோதிய கார் தீப்பிடித்து, டிரைவர் உயிரிழந்தார். காயம் அடைந்த நிலையில் மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வடக்கு டில்லி ஹுலம்பி குர்த் பகுதியில், ஜாண்டா சவுக் அருகே நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, சாலைத் தடுப்பில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து நரேலா தொழிற்பேட்டை போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினர் வந்தனர். எரிந்த நிலையில் இருந்த வெள்ளை நிற, 'எர்டிகா' காருக்குள் டிரைவர் இறந்து கிடந்தார். பக்கத்து சீட்டில் இருந்தவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, எஸ்.ஆர்.ஹெச்.டி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிரைவர் உடல், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஜக்பீர், பலியான டிரைவர் விபேந்தர் ஆகிய இருவரும் ஹரியானா மாநிலம் பானிபட் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ