ஓடும் காரில் தீ உயிர் தப்பிய ஓட்டுநர்
அம்பேத்கர் நகர்: அம்பேத்கர் நகர் பகுதியில் கான்பூர் - சிராக் டில்லி சாலையில் புதன்கிழமை இரவு ஒரு கார் தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.சரியான நேரத்தில் காரில் இருந்து இறங்கி ஜாமியா நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ஷகீல் அகமது தப்பினார்.இரவு 9:00 மணி அளவில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் தீயணைப்புத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.