லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
புதுடில்லி: வட டில்லியில் உள்ள முகுந்த்பூர் மேம்பாலத்திற்கு அருகில், சாலை தடுப்பின் மீது ஏறிய லாரி கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் உயிரிழந்ததார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பசுபதி. லாரி ஓட்டுனர். இவர், கமலா சந்தையில் இருந்து கேரா நோக்கி லாரியை ஓட்டிச் சென்றார். முகுந்தபூர் மேம்பாலத்தை நெருங்கிய போது, லாரியை திருப்ப முடியாமல், கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, சாலை தடுப்பினர் மீது லாரி ஏறி, கவிழ்ந்தது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. உள்ளே சிக்கியிருந்த ஓட்டுனர் பசுபதி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, லாரி அப்புறப்படுத்தப்பட்டது. லாரிக்குள் சிக்கியிருந்த ஒட்டுனரின் உடலை, பிரதேச பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால், முகுந்த்பூர் மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி அகற்றப்பட்ட பின், போக்குவரத்து சீரடைந்தது.