உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி: ராஜ்நாத் பாராட்டு

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி: ராஜ்நாத் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலசோர்: ஒடிசா கடற்கரையில், நவீன தலைமுறையைச் சேர்ந்த ஆகாஷ்(ஆகாஷ் என்.ஜி) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.இது மிக குறைந்த உயரத்தில், அதிவேக ஆளில்லா வான்வெளி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை சோதனையை ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் டிஆர்டிஓ வெற்றிகரமாக செய்தது. அப்போது, ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை மறித்து தாக்கி அழித்தது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a3i27mny&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஏவுகணை செயல்பாடுகள் ஐடிஆர் சண்டிபூர் அமைத்த ரேடார், டெலிமெட்ரி மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் அமைப்புகள் சேகரித்த தரவுகள் மூலம் சரிபார்க்கப்பட்டது. ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ, விமானப்படை, பாரத் டயனமிக்ஸ் லிமிடெட் மற்றும் பெல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.ஆகாஷ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக டிஆர்டிஓ, விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை