உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை மாத்திரை ஆலைக்கு சீல்

போதை மாத்திரை ஆலைக்கு சீல்

அமராவதி : ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் பகுதியில் அல்ப்ராசோலம் என்ற போதை மாத்திரை ஆலை சட்டவிரோதமாக இயங்குவதாக, டி.ஆர்.ஐ., எனப்படும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடு த்து டி.ஆர்.ஐ., அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அல்ப்ராசோலம் போதை மாத்திரைகள் 119 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 23 கோடி ரூபாய். போதை மாத்திரை ஆலை செயல்பட மூளையாக இருந்தவர், நிதியுதவி செய்தவர், வேதியியல் நிபுணர் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:

கள்ளில் கலப்படம் செய்ய அல்ப்ராசோலம் மாத்திரைகளை சட்டவிரோதமாக தயாரித்து, இந்த கும்பல் விற்பனை செய்துள்ளது. அந்த ஆலையில் திரவ நிலையில் இருந்த 3,600 லிட்டர் அல்ப்ராசோலம், 87 கிலோ மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு ஆலைக் கு 'சீல்' வைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ