உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருந்து இல்லாத மருத்துவமனைகள்; உப லோக் ஆயுக்தா அதிகாரி சீற்றம்

மருந்து இல்லாத மருத்துவமனைகள்; உப லோக் ஆயுக்தா அதிகாரி சீற்றம்

பெங்களூரு ; மாநிலத்தில் கிராமப்புறம் மற்றும் தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் சரியான சமயத்தில் கிடைப்பதில்லை. தனியார் மற்றும் வெளியில் உள்ள மருந்துக் கடைகளுக்கு சீட்டு எழுதிக் கொடுப்பது வழக்கமாகி விட்டது.'எந்தக் காரணம் கொண்டும் அரசு மருத்துவர்கள் வெளியே சென்று மருந்துகளை வாங்கி வரும்படி சீட்டு எழுதிக் கொடுக்கக் கூடாது. அது மட்டுமல்ல... அவசியமான பரிசோதனைகளையும் அரசு மருத்துவமனைகளிலேயே செய்ய வேண்டும்' என்று 2017ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையை ஒழுங்காகப் பின்பற்றினாலே ஏழை, எளிய மத்திய வர்க்க நோயாளிகள், இலவசமாக மருத்துவம் பார்க்க முடியும். ஆனால், ஏழை, எளியவர்களுக்கு இலவச மருத்துவம் என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.இதை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன், உப லோக் ஆயுக்தா அதிகாரி வீரப்பா, துமகூரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.நோயாளிகள், 'இங்கு முக்கியமான மருந்துகள் இல்லை. எனவே, வெளியே மருந்துக் கடைகளில் வாங்கிவர சீட்டு எழுதிக் கொடுக்கின்றனர். அது போலவே பரிசோதனைகளுக்கும் வெளியே எழுதிக் கொடுக்கின்றனர்' என்றனர்.உடனே வீரப்பா, மருத்துவ அதிகாரிகளை அழைத்து, 'யார் வெளியே சீட்டு எழுதி கொடுக்கின்றனரோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எச்சரித்தார்.தொடர்ந்து, அவர் கூறியதாவது:நான், 7-8 தாலுகா மருத்துவமனைகளுக்கு திடீரென்று சென்று சோதனை செய்து வந்தேன். பல முக்கியமான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவமனைகளில் இருப்பில் இல்லை.ஒருவேளை அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால், தனியாரிடம் மருந்துகளை வாங்கி, அதை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க வழிவகை உள்ளது. மருந்துகள் தட்டுப்பாடு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் wஅறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை