உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.75 கோடி போதைப்பொருள் கடத்தல்: பெங்களூருவில் நைஜீரிய பெண்கள் இருவர் கைது

ரூ.75 கோடி போதைப்பொருள் கடத்தல்: பெங்களூருவில் நைஜீரிய பெண்கள் இருவர் கைது

மங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதை கடத்தல் தொடர்பாக நைஜீரிய பெண்கள் இருவரை கர்நாடக போலீஸ் கைது செய்துள்ளது.இந்தியாவில், குறிப்பாக பெங்களூரு மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில், போதை பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருவது பெரும் சவாலாக உள்ளது.இத்தகைய போதை வலையமைப்புகளை தடுக்க, உளவுத்துறை மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தேக நபர்களை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கைகளை போலீஸ் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.இத்தகைய சூழ்நிலையில் தான் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் நைஜீரிய பெண்கள் கைதாகி உள்ளனர்.கைது குறித்து மங்களூரு போலீஸ் அதிகாரி அனுபம் அகர்வால் கூறியதாவது:கைதானவர்கள் பம்பா பான்டா 31, மற்றும் அபிகெய்ல் அடோனிஸ் 30 என்றும் இருவரும் டில்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு பெங்களூருக்கு வந்த நிலையில் பிடிபட்டனர்.அவர்கள் தள்ளுவண்டிகளில் பைகளை இழுத்து வந்தனர். அவர்கள் மீது சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் 37 கிலோ போதைப் பொருளுடன், 4 மொபைல் போன்கள், பாஸ்போர்ட்கள் மற்றும் ரூ.18,000 இருந்தது. அவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.இவர்கள் இருவரும் டில்லியில் வசிக்கிறார்கள். இங்கிருந்து நாடு முழுவதும் போதை மருந்து கடத்தல் வேலைகளை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விமானங்கள் மூலம் போதைப்பொருட்களை மும்பைக்கு 37 முறையும் 22 முறை பெங்களூருக்கும் கொண்டு சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.இவர்களில் பான்டா 2020லும் அடோனிஸ் 2016 முதலும் தொழில்முறை விசாவில் இந்தியாவில் தங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக போதைப்பொருட்கள் கடத்தி வருவது தெரியவந்துள்ளது. இருவரிடம் மேலும் விசாரணை நடைபெறுகிறது.இவ்வாறு அனுபம் அகர்வால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

MARUTHU PANDIAR
மார் 16, 2025 20:22

இவளுகளின் தொடர்புகளை கறந்து விட்டு அடுத்த நொடி நாடு கடத்த வேண்டும் . ஒரு இந்தியன் இந்த குற்றத்துக்காக மாற்று நாட்டில் இப்படி சிக்கியிருந்தால் ஒரே வாரத்தில் ... அவனை புதைத்த இடத்தில் புல்லு முளைத்திருக்கும்.


MARUTHU PANDIAR
மார் 16, 2025 20:18

திருப்பூரில் போய் பாருங்கள் . விசா காலாவதியான ஆப்பிரிக்கர்கள் கணக்கில்லாம இருக்காங்களாம் . கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து கிட்டத்தட்ட இங்கு நிரந்தர வாசிகளாகவே ஆகி விட்டார்களாம் . அவர்களது ஒரே பிஸினஸ் போதைப் பொருள் கடத்தல் தானாம்.


Ramesh Sargam
மார் 16, 2025 19:46

தமிழகம் போதைப்பொருட்கடத்தலின் தலைநகரம் என்றால், கர்நாடகா துணை நகரம். அங்கே திமுக ஆட்சி. இங்கே காங்கிரஸ் ஆட்சி. ரெண்டுமே கூட்டணி உறுப்பினர்கள்.


Sudha
மார் 16, 2025 19:05

ஏன் நைஜீரியா குடிமகள் மட்டும் போதை கடத்தல் செய்கிறார்கள்? அனைத்து நைஜீரியார்களையும் ஒரே நேரத்தில் ரவுண்டு கட்டினால் என்ன?


பாலா
மார் 16, 2025 18:41

போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்தாலும் அவர்களுக்கு ஓட்டு இருந்தால் இந்நேரம் நிறத்தை வைத்து மனிதர்களை பிரிக்க கூடாது என்று மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் போய் இருப்பார்கள் திராவிடாஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை