உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமண வலையில் ஆண்களை வீழ்த்தி பணம் பறித்த துமகூரு பெண் மீது புகார்

திருமண வலையில் ஆண்களை வீழ்த்தி பணம் பறித்த துமகூரு பெண் மீது புகார்

துமகூரு: சமூக வலைதளங்கள் வழியே அறிமுகம் செய்து, ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த பெண் மீது புகார் பதிவாகியுள்ளது.துமகூரின், தானா பேலஸ் அருகில் வசிப்பவர் இத்ரீஸ், 32, இவருக்கு திருமணமாகி, மனைவி உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே இரண்டாம் திருமணம் செய்து கொள்ள, பெண் தேடினார்.இவருக்கு, புரோக்கர் மூலமாக, துமகூரு நகரின், சதாசிவநகரில் பர்ஹானா கானம், 29, என்பவர் அறிமுகமானார். இருவரும் பேசி, பழகி 2014ல் திருமணம் செய்து கொண்டார்.திருமண செலவை இத்ரீஸ் ஏற்றுக் கொண்டார். அத்துடன் பர்ஹனா கானமுக்கு 1.42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் வாங்கிக் கொடுத்தார்.திருமணமான 27 நாட்களில், பர்ஹானா கானம் நடத்தையில் மாற்றம் தென்பட்டது. பேச்சிலும் அலட்சியம் காட்டினார். கணவருக்கு தெரியாமல், யாருடனோ திருட்டுத் தனமாக மொபைல் போனில் பேசினார்.இதை பற்றி இத்ரீஸ், விசாரித்தபோது தான் பர்ஹானாவுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்தது. முதல் கணவருடன் திருட்டுத்தனமாக பேசியதும் தெரிய வந்தது.கோபமடைந்த இத்ரீஸ், மனைவியுடன் மனக்கசப்பு ஏற்பட்டது. சண்டை அதிகரித்து பர்ஹானாவை வீட்டை விட்டு விரட்டினார். இதுகுறித்து, திலக் நகர் போலீஸ் நிலையத்தில் இத்ரீஸ் புகார் அளித்தார். திருமணத்துக்காக செலவு செய்த பணம், தங்க நகைகளை பெற்றுத் தரும்படி கோரினார்.தன் மீது புகார் அளித்ததால் கோபமடைந்த பர்ஹானா கானம், குண்டர்களை அனுப்பி இத்ரீஸை தாக்கினார். இதுகுறித்து போலீசாரிடம் கூறியும், அவர்கள் சரியாக விசாரிக்காமல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.மனம் நொந்த இத்ரீஸ், சில நாட்களுக்கு முன்பு, ஐ.ஜி.,யிடம் புகார் அளித்தார். ஐ.ஜி.,யின் உத்தரவுக்கு பின், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் பர்ஹானா கானம், நான்கைந்து ஆண்களை காதலித்து வருவது தெரிய வந்தது.திருமணமாகி மனைவியை இழந்த ஆண்கள், நடுத்தர வயது ஆண்களை குறிவைத்து திருமண ஆசை காட்டி ஏமாற்றி, பணம் பறித்து வந்துள்ளார். ஆண்களை வலையில் விழவைத்து, நெருக்கமாக வீடியோ எடுத்து, 'பிளாக்மெயில்' செய்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஏற்கனவே ஜாகிர் என்பவரை திருமணம் செய்த பர்ஹானா கானம், அதை மூடி மறைத்து, இத்ரீசை திருமணம் செய்து கொண்டதும், முதல் கணவர் ஜாகிருடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.பர்ஹானா கானம் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. அவரை கைது செய்யவும் போலீசார் தயாராகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை