உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியை தாக்கிய புழுதிப்புயல்; நடுவானில் 227 பேருடன் சென்ற விமானம் சேதம்

டில்லியை தாக்கிய புழுதிப்புயல்; நடுவானில் 227 பேருடன் சென்ற விமானம் சேதம்

டில்லி: டில்லியை கடுமையாக தாக்கிய புழுதிப்புயல் காரணமாக நடுவானில் 227 பேருடன் சென்ற இண்டிகோ விமானம் சேதமடைந்தது. விமானியின் சாமர்த்தியத்தால், 227 பயணிகள் உயிர்தப்பினர். தலைநகர் டில்லி இன்று மாலை முதல் நொய்டா , காசியாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது. அதோடு, பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது. காற்றின் வேகம் மணிக்கு 79 கி.மீ., வேகத்தில் வீசியது. யமுனா விஹார், பஜன்புரா மற்றும் கோஹல்புரி பகுதியில் உள்ள மக்கள் இந்தப் புழுதிப்புயலால் பெரிதும் பாதித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ddgw83ob&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹரியானா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்றின் சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புழுதிப்புயல் காரணமாக விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. டில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பெய்த ஆலங்கட்டி மழையால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. விமானியின் சாமர்த்தியத்தால் 227 பயணிகளுடன் விமானம் பாதுகாப்புடன் ஸ்ரீநகரில் தரையிரக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
மே 22, 2025 03:59

10 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கும் விமானங்கள் இறங்கும் பொழுது மேகக்கூட்டம் வழியாக வரும் பொழுது கடுமையான கால நிலைகளில் இது போல சேதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் பருவ நிலை மோசமாக இருந்தால் விமானத்தை வேறு பாதுகாப்பான ஊர்களுக்கு அனுப்பி விடுவார்கள். ஏன் அப்படி அனுப்பவில்லை என்பது புரியவில்லை.


மீனவ நண்பன்
மே 21, 2025 22:58

தமிழ்நாட்டு போக்குவரத்து கழக பேருந்து நிலமையிலா விமானங்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை