உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கசாப் வழக்கிற்கு ஒரு நாள் செலவு ரூ. 2 லட்சம்

கசாப் வழக்கிற்கு ஒரு நாள் செலவு ரூ. 2 லட்சம்

மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தூக்குதண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் வழக்கில் விசாரணைக்காக ஒரு நாள் ஒன்று ரூ. 2 லட்சம் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான கசாப் கைது செய்யப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பை எர்வாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அஜ்மல் கசாப் தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குதண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளான். இதற்காக வக்கீல் கட்டணம், அவரின் விமான கட்டணம் என தினசரி ரூ.2 லட்சம் வரை மகாராஷ்டிரா அரசு செலவிடுகிறது. இது குறித்து மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜராகும் சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், சுப்ரீம் கோர்டில் ஆஜராக டில்லி- மும்பை என முதல்தர வகுப்பில் விமானத்தில் செல்கிறார். இதற்காக மகாராஷ்டிரா அரசு ரூ. 50 ஆயிரம் விமான கட்டணமாக வழங்குகிறது.தவிர கூடுதலாக ரூ.10 ஆயிரம் இதர செலவுகளுக்காக வழங்கி வருவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கூறப்பட்டுள்ளது. மேலும் கோர்டில் நடந்து வரும் அஜ்மல் கசாப் தொடர்பான வழக்கிற்கு தினசரி செலவு ரூ.1 லட்சம் எனவும், இதன் மூலம் ‌‌மொத்தம் ரூ. 2 லட்சம் மக்களி்ன் வரிப்பணம் செலவிடப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை