உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் இன்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு; வயநாடு லோக்சபா தொகுதியிலும் இடைத்தேர்தல்

ஜார்க்கண்டில் இன்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு; வயநாடு லோக்சபா தொகுதியிலும் இடைத்தேர்தல்

ராஞ்சி : ஜார்க்கண்டில், 43 சட்ட சபை தொகுதிகளில் இன்று(நவ.,13) முதற்கட்ட தேர்தல் நடக்கிறது.இங்கு, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.இன்று, 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள நிலையில், மீதமுள்ள 38 தொகுதிகளில், வரும் 20ல் தேர்தல் நடக்கிறது; 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணிக்கும், பா.ஜ., கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், காங்., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். இந்த தேர்தலில், 609 ஆண்கள், 73 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம், 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.முதற்கட்ட தேர்தலில், செரைகெல்லா, ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் மேற்கு, ஜெகநாத்பூர், ஜாம்ஷெட்பூர் கிழக்கு ஆகியவை முக்கிய தொகுதிகள். செரைகெல்லா தொகுதியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகி, சில மாதங்களுக்கு முன், பா.ஜ.,வில் சேர்ந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் போட்டியிடுகிறார். ராஞ்சி தொகுதியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில், ராஜ்ய சபா எம்.பி., மஹுவா மஜி, ஜாம்ஷெட்பூர் மேற்கில், காங்கிரசைச் சேர்ந்த மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா போட்டியிடுகின்றனர்.ஜாம்ஷெட்பூர் கிழக்கில், காங்., வேட்பாளர் அஜோய் குமார், பா.ஜ.,வின் பூர்ணிமா தாஸ் சாஹூவை எதிர்த்து களம் காண்கிறார். ஜெகநாத்பூர் தொகுதியில், முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனைவி கீதா கோடா, பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.இதேபோல், கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், காங்கிரஸ் சார்பில், அந்த கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் சத்யன் மொகேரியும், பா.ஜ., சார்பில் நவ்யாவும் போட்டியிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mohan
நவ 13, 2024 09:30

வயநாடு அம்மணி வெற்றிவாகை சூடுவார் அவர்கள் சிறுபான்மையினர் அங்கு அதிகம் ..காங்கிரெஸ்ஷே இவர்களை வைத்துதான் பிழைப்பை ஒட்டி கொண்டு உள்ளது ..இன்னும் ரெண்டொரு தேர்தலில் அவர்கள் பெரும்பாண்மை ஆகிவிடுவார்கள் இல்லை என்றால் ஆக்கிவிடுவார்கள் நம் அரசியல்வாதிகள், நடுநிலை ஜந்துக்கள் ..பின்னென்ன முகலாயர்களின் ஆட்சிதான் பின்னர் நாமும் கத்திக்கு பயந்து மதம் மாற வேண்டியதுதான் ..இந்தியா இஸ்லாமிய நாடாக அறிவித்துவிடுவார்கள் பங்களாதேஷ் போல .. எப்போதும் நாம் திருந்தியதாக சரித்திரம் இல்லை இதுதான் இந்தியாவின் தலைவிதி


RAMAKRISHNAN NATESAN
நவ 13, 2024 06:43

ராஞ்சி சிறையிலிருந்த லாலுவை இப்போது பாஜகவால் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை ......


vadivelu
நவ 13, 2024 07:26

திருடர்களை தொடுவதே அழுக்கு என்று நினைத்து இருப்பார்கள். மாளிகையில் இருந்தாலும் திருடன் திருடன்தான்.


சமீபத்திய செய்தி