மேலும் செய்திகள்
கேட்பாரற்று நின்ற காரில் ரூ.1.14 கோடி பறிமுதல்
30-Jan-2025
உத்தரகன்னடா: உத்தரகன்னடா, அங்கோலாவின் கொட்லகத்தே கிராமத்தின், பல இடங்களில் நேற்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது.வீட்டில் இருந்த பொருட்கள் கீழே சிதறி விழுந்தன. சில வீடுகளில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. பூமிக்குள் இருந்து சத்தம் கேட்டதால், மக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.'இது லேசான நில நடுக்கம்தான்' என, வல்லுனர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால் எத்தனை ரிக்டர் பதிவானது என்பதை, அவர்கள் தெளிவுபடுத்தவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பும், இதே இடத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.இதனால், கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர்.
30-Jan-2025