உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைது நடவடிக்கை: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

கைது நடவடிக்கை: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

புதுடில்லி: ‛‛ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம்சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது '' என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமின் மனு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் உஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம்சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது. நீதிமன்றம் அனுப்பிய சம்மனின்படி குற்றம்சாட்டப்பட்டவர் ஆஜர் ஆனால், அவர் கஸ்டடியில் உள்ளதாக கருதக்கூடாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cvyks25k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரை கஸ்டடியில் எடுக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி பெற வேண்டும். அதற்காக அமலாக்கத்துறை கூறும் காரணங்கள் திருப்தி அளித்தால் மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் கீழ் ஆஜரானவர்கள், ஜாமினுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Subash BV
மே 16, 2024 18:28

There will be more MISUSEReasonOur meaningless constitution and thumb rules PUT THE BHARAT FIRST


Saai Sundharamurthy AVK
மே 16, 2024 18:13

மத்திய அரசு என்று ஒன்று எதற்கு ??? பேசாமல் உச்சநீதிமன்றமே ஆட்சி நடத்திக் கொள்ளலாம். கவர்னர், ஜனாதிபதி, பிரதமர் என்று யாரும் தேவையில்லை. பாகிஸ்தானையும், சீனவையும் நேரடியாக இறக்குமதி செய்து கொள்ளலாம்


Easwar Kamal
மே 16, 2024 17:56

அமலாக்கத்துறை நேர்மையாக நடந்தால் எதற்கு உச்ச நீதி மன்றம் தலையில் குட்டு வைக்க போகிறது ஆளும் கட்சி சொல் பேச்சை நடப்பதால்தான் இந்த பஞ்சாயத்து தங்களுக்கு ஜால்ரா தட்டினால் வாஷிங் மெசினில் போட்டது போன்று புது பொலிவு பெற்று விடுகிறார்கள்


Kasimani Baskaran
மே 16, 2024 17:38

ஒருவரை குற்றவாளி என்று உறுதி செய்த பின்னர்தான் அமலாக்கத்துறை சம்பந்தப்பட்டவர்களையே விசாரிக்க ஆரம்பிக்கிறது ஆனால் உச்ச நீதிமன்றம் வழக்குக்கு மேலும் வலுவான ஆதாரம் சேர்ப்பதை தடை செய்வது போல பஞ்சாயத்தில் ஈடுபடுவது அக்கிரமம்


vijay
மே 16, 2024 16:54

விடியல் கூட்டத்திற்கு ஆதரவளிப்பவர்கள் மகிழ்ச்சியாக இந்த தீர்ப்பை வரவேற்பது எதிர்பார்த்த ஒன்றுதான் விடியல் கூட்டத்தின் கூற்றுப்படி, தவறு செய்பவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் எல்லோரும் யோக்கியமானவர்கள் விடியலாட்சியில் தேனாறும், பாலாறும், பேச்சு சுதந்திரமும் மூன்றாண்டுகளாக களைகட்டுகிறது


venugopal s
மே 16, 2024 16:31

உச்ச நீதிமன்றம் மட்டும் இல்லை என்றால் மத்திய பாஜக அரசு இந்நேரம் எல்லா எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறையில் அடைத்து சர்வாதிகார ஆட்சியை அமல் படுத்தி இருப்பார்கள்!


Shreyas
மே 16, 2024 16:24

நீதி மன்றத்துக்கு அரசு கீழ்ப்படிந்து தான் ஆக vendum


Shreyas
மே 16, 2024 16:22

நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்களை அரசாங்கம் கேள்வி கேட்க முடியுமா ? கீழ்ப்படிந்து தான் ஆக வேண்டும்


ஆரூர் ரங்
மே 17, 2024 12:11

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதானே ஜனநாயகத்தின் அடித்தளம்? தானே தேர்ந்தெடுக்கும் கொலீஜியம் பற்றி அரசியல் சட்டத்தில் உள்ளதாக தெரியவில்லை. எங்குள்ளது ? நமது அரசியல் சட்டத்தின் மூலமான பிரிட்டிஷ் சட்டப்படி கோலீஜியம் கிடையாது அங்கு தேர்வுக் குழு ஆலோசனை அடிப்படையில் பிரதமரே நீதிபதிகளை நியமிக்கிறார். அமெரிக்காவிலும் ஆளும் அரசே நியமிக்கிறது.


Syed ghouse basha
மே 16, 2024 15:44

இந்த தீர்ப்பு இன்னும் இந்தியாவில் நீதி தவறாத நீதிபதிகள் இருப்பதை காட்டுகிறது மக்கள் கொஞ்சமாவது நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்


Bala Paddy
மே 16, 2024 15:32

ஆமாம் குற்றம் செய்தவருக்கு தினம் அல்வா ஊட்டி விட வேண்டும்அவர்கள் பிரியாணி கேட்டால் அமலாக்க துறை அவர்களே செஞ்சு தர வேண்டும் தினமும் கால் அமுக்க ஆள் போட வேண்டும்


என்றும் இந்தியன்
மே 16, 2024 16:35

இதற்கு நிதிமன்றம் நிச்சயம் ஒப்புக்கொள்ளும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ